YouTurn

பிரதமர் மோடியின் தாயை அவதூறாக பேசியது பாஜக ஆதரவாளர் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

பிரதமர் மோடியின் தாயை அவதூறாக பேசியது பாஜக ஆதரவாளர் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பீகாரில் காங்கிரஸ் நடத்தும் பேரணியில் பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டவர் பெயர் முகமது ரிஸ்விதான். பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர், பாஜகவைச் சேர்ந்த நேக் முகமது ரிஸ்வி. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு நபர்களை, ஒன்றாக இணைத்து, பீகாரில் காங்கிரஸ் நடத்தும் பேரணியில் பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ராகுல் காந்தி அவர்கள் வாக்காளர் உரிமை யாத்திரை என்ற தலைப்பில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக எப்படி வாக்காளர்கள் ஓட்டை திருடுகிறது என்பதை பற்றிய பிரச்சாரம் பீகாரில் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பிரச்சார மேடையில் ராகுல் காந்தி வருவதற்கு முன்னால் மேடை ஏறிய ஒரு சிலர் இந்திய பிரதமர் மோடியை பற்றியும் அவருடைய தாயைப் பற்றியும் தரை குறைவான வார்த்தைகளில் கோஷம் எழுப்பினார்கள். இது கடும் எதிர்ப்பலைகளை பாஜக தரப்பில் ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பரவிய இந்த காணொளியை வைத்து கோஷம் எழுப்பிய நபர்களை கைது செய்தனர். தீர விசாரித்த போது தான் அவர்கள் அனைவருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.. பீகார் மக்களின் வெறுப்பை காங்கிரசுக்கு எதிராக திருப்புவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் போல் வேடமனிந்து பாஜக சங்கிகள் செய்த கேவலமான திட்டம் வெளியே வந்தது…

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

பீகாரில் காங்கிரஸ் நடத்தும் பேரணியில் பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி முகமது ரிஸ்வி என்கிற ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நில்லையில் கைது செய்யப்பட்ட முகமது ரிஸ்வி பாஜகவை சேர்ந்தவர் என்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படத்தில் இரண்டு புகைப்படங்கள் இருப்பதை காணமுடிந்தது. அதில் முதலில் சட்டை இல்லாமல் இருக்கும் புகைப்படம் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி, “பீகார் கிராமத்தில் நடந்த எதிர்க்கட்சி நிகழ்வின் போது பிரதமர் மோடியை 'தவறான வார்த்தைகளால் திட்டிய' உள்ளூர் காங்கிரஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்” என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்துடன் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் யாத்திரையின் போது, பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் முகமது ரிஸ்வி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சட்டையில்லாமல் காணப்படும் நபர் இப்பிரச்சனையில் கைது செய்யப்பட்ட முகமது ரிஸ்விதான் என்பதை உறுதி செய்யமுடிந்தது. 

image.png


இதையடுத்து  மற்றொரு படம் குறித்து தேடினோம். அப்போது Nek Mohammad Rizvi என்பவரின் பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் ஆகஸ்ட் 30 அன்று பரவி வரும் புகைப்படம் இருக்கும் வீடியோ ஒன்று இருந்ததை பார்க்கமுடிந்தது. மேலும் அவரது பேஸ்புக் பக்கத்தை பார்க்கும் போது, இவர் போபாலை சாந்தவர் என்பதும், பாஜகவை ஆதரவாளர் என்பதையும் அறிய முடிந்தது. 


இதன் மூலம் பாஜக ஆதரவாளரான நேக் முகமது ரிஸ்வியின் முகத்தோற்றமும், பிரதமரின் தாயை இழிவாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட முகமது ரிஸ்வியின் முகத்தோற்றமும் வெவ்வேறாக இருப்பதை உறுதி செய்யமுடிந்தது. 


அதே போல் ஆகஸ்ட் 29 அன்று Nek Mohammad Rizvi தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்றும், காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு தனது புகைப்படத்தை பரப்புவதாகவும் அவர் பேசியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


மேலும் Nek Mohammad Rizvi இது தொடர்பாக NDTV ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றையும் பார்க்கமுடிந்தது. அதிலும் தனக்கும் பிரதமரின் தாயை இழிவாக பேசிய சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று தெளிவுப்படுத்தி இருப்பதை காண முடிந்தது.


முடிவு: 

எனவே பீகாரில் காங்கிரஸ் நடத்தும் பேரணியில் பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டவர் பெயர் முகமது ரிஸ்விதான். பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர், பாஜகவைச் சேர்ந்த நேக் முகமது ரிஸ்வி. இந்நிலையில் இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து  பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க