YouTurn

சென்னை மெட்ரோ திட்டத்தை அதிமுக தொடங்கியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

சென்னை மெட்ரோ திட்டத்தை அதிமுக தொடங்கியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை மெட்ரோ திட்டத்திற்கான திட்டமிடல் மற்றும் ஒப்புதல் பணிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2007ஆம் ஆண்டில் இதற்கான திட்ட அறிக்கை (DPR) சமர்பிக்கப்பட்டு, தமிழ்நாடு அமைச்சரவையில் ஒப்புதலும் வழங்கப்பட்டது.

பரவிய செய்தி

Metro rail Project in Chennai was Introduced and Developed by ADMK Jayalalitha Amma and ADMK EPS Extended that.... Now DMK is taking credit of all the Hardwork put by ADMK Govt...

This is called as "காலத்தின் கொடுமை" that all "Upee கொத்தடிமைகள்" taking credit…

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அறிமுகப்படுத்தியதாகவும், அதன்பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் விரிவுப்படுத்தியதாகவும் கூறி சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தேடினோம். அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஜனவரி 28. 2009 அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து, அதற்கான திட்டமிடல் மற்றும் ஒப்புதல் பணிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி ஒரு விரிவான திட்ட அறிக்கையினைத் தயாரிக்கக் தமிழக அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, இந்தப் பணி டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, ”Chennai metro rail: fastest project to get CCEA nod” என்ற தலைப்பில் Econimic Times ஊடகத்தில் ஜனவரி 29, 2009 அன்றும், "Who Initiated Chennai Metro? DMK, AIADMK War of Words Continues" என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஜூலை 3, 2015 அன்றும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது என்றும், 2007ல் இதற்கான திட்ட அறிக்கை (DPR) சமர்பிக்கப்பட்டு, தமிழ்நாடு அமைச்சரவையில ஒப்புதலும் வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  இதனுடைய மொத்த மதிப்பீடு 14,600 கோடி என்று திட்டமிடப்பட்டதாகவும், திட்ட செலவுகளில் 59% ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரையிலான மெட்ரோ திட்டத்திற்கான உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியை அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஜூன் 10, 2009 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை வெளியிட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது. 

image.png


இதையடுத்து அதிமுக ஆட்சியில் மெட்ரோ பணிகள் நடைபெற்றதை குறித்து தேடினோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் மே 17, 2012 அன்று வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மெட்ரோ பணிகள் நிறுத்தப்பட்டு, மெட்ரோ ரயிலுக்கு பதிலாக 300 கிமீ “மோனோ ரயில்” திட்டத்தை தேர்ந்தெடுத்தது அதிமுக அரசு. பின்னர் மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டு, இறுதியில் கடந்த 2015-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டமான “அலந்தூர் ↔ கோயம்பேடு” பகுதியின் மெட்ரோ தொடங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது உறுதியானது. இதை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார் என்று கூறி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2015-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டமான “அலந்தூர் ↔ கோயம்பேடு” பகுதியின் மெட்ரோ மட்டுமே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க