யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ, கடந்த ஜூனில் தெஹ்ரானில் நூற்றுக்கணக்கான பெண்கள் 'ஹொசைனி குழந்தை விழாவில்’ கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக கூறும் ஒரு விழாவின் போது எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஈரானில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
பரவிய செய்தி
இதுக்கு பெயர் தான் குழந்தைகள் Nரபலி.. சின்ன குழந்தைகளை இஸ்லாத்தை ஏற்காத அனைவரையும் Koல்ல தீVரவாதத்துக்காக அர்பணிக்கும் இஸ்லாமிய தீVரவாத தாயார்கள்.

விரிவான விளக்கம்
சிறு வயதில் குழந்தைகள் இஸ்லாத்தை ஏற்காததால், அனைத்து குழந்தைகளையும் தீரவாதத்திற்காக அவர்களது தாயார்கள் அர்பணிப்பதாக 1நிமிடம் 41 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் இதுக்கு பெயர் தான் நரபலி எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது CNN ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் "Hundreds of women offer babies as martyrs in Tehran ceremony" என்ற தலைப்பில் ஜூன் 28,2025 அன்று ஒரு சார்ட்ஸ் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த வீடியோவில் ஜூன் 27 இரான், தெஹ்ரான் என்றும், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளும் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.

இதையடுத்து இந்த செய்தி குறித்து keywords மூலம் கூகுளில் தேடி பார்த்தோம். அப்போது ஜூன் 29 அன்று Times Of India ஊடகத்தில், "Hosseini infants ceremony: In war's shadow, hundreds of Iranian mothers offer babies as martyrs - video" என்ற தலைப்பில் ஜூன் 29 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் தெஹ்ரானில் நூற்றுக்கணக்கான பெண்கள், 'ஹொசைனி குழந்தை விழாவில்' கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக கூறும் ஒரு விழா என்றும், இந்த நிகழ்வு ஈரானில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல் financial express, economic times போன்ற ஊடகப்பக்கங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.

முடிவு :
நம் தேடலில், இது தெஹ்ரானில் 'ஹொசைனி குழந்தை விழாவில்’ என்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விழாவாகும். இதை தீவிரவாதிகளின் தாயார்கள், குழந்தைகளை, இஸ்லாம் மதத்தை ஏற்காதவர்களை ந*ரபலி கொடுக்கப் போகிறார்கள் என்று கூறி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.