YouTurn

நடராஜர் சிலையை லோகோவாக வைத்துள்ள CERN என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

நடராஜர் சிலையை லோகோவாக வைத்துள்ள CERN என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

CERN நிறுவனத்தில் உள்ள நடராஜர் சிலை, இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தியை திரித்து CERN நிறுவனத்தின் லோகோவாக நடராஜர் சிலை உள்ளது என்றுக் குறிப்பிட்டு தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

உலகின் மிகப் பெரிய துகளியல் (Particle Physics) ஆய்வு மையமான ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) தனது லோகோவாக நடராஜர் சிலையை வைத்துள்ளது - ஸ்ரீ டிவி ஊடகத்தினர்

image.png

Youtube Link 

விரிவான விளக்கம்

செப்டம்பர் 7, 2025 அன்று Shree TV ஊடகத்தில், “போகுவரத்து கழகத்தில் ஆயுதப் பூஜைக்கு தடை - கண்டிக்கும் BMS” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது. அதில் பேசிய நபர், CERN உருவகப்படுத்த லோகோ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, நடராஜர் சிலையை லோகாவாக வைத்துள்ளதாக தெரிவித்தார். 


உண்மை என்ன? 

முதலில் CERN லோகோ குறித்து கூகுள் தேடிப் பார்த்தோம். Design- guidelines. Web. cern. Ch என்ற இணையதளப்பக்கத்தில், The CERN லோகோ குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தங்கள் லோகோ இரண்டு கூறுகளால் ஆனது என்று குறிப்பிட்டு, CERN என்ற சொல் அமைப்பின் தலைப்பிலிருந்து பெறப்பட்ட சுருக்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது Conseil Européen pour la Recherche Nucléaire, or European Council for Nuclear Research என்பதன் சுருக்கமே cern என்றும், பின்னிப் பிணைந்த வளையங்களால் இந்த லோகோ உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும் அந்த பக்கத்தில் CERN லோகோவும் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் நடராஜர் சிலை எதுவும் இல்லை என்பதையும் காணமுடிந்தது. 

image.png


இதையடுத்து CERNக்கும், நடராஜர் சிலைக்கும் என்ன தொடர்பு என்று தேடிப் பார்த்தோம். அப்போது cds. cern. ch என்ற இணையதளப்பக்கத்தில், ”Lord Shiva Statue Unveiled” என்ற தலைப்பில் நடராஜர் சிலை குறித்து கூறப்பட்டிருந்தது. அதில் நடராஜர் வடிவில் உள்ள 2 மீட்டர் உயர சிவபெருமான் சிலை, இந்தியாவிலிருந்து cern-க்கு பரிசாக ஜூன் 2004 இல் வழங்கப்பட்டதாகவும், இந்த சிலை பிரதான கட்டடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள, 39 மற்றும் 40 கட்டடங்களுக்கு இடையிலான சதுக்கத்தில் நிரந்திரக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) தனது லோகோவாக நடராஜர் சிலையை வைத்துள்ளது எனப் ஸ்ரீ டிவி ஊடகத்தினர் பரப்பும் செய்திகள் முற்றிலும் தவறானவை. CERN நிறுவனத்தில் உள்ள நடராஜர் சிலை, இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க