YouTurn

இம்மானுவேல் சேகரன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இம்மானுவேல் சேகரன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கை அங்கீகரித்து அவருக்கு ‘அஞ்சல் தலை (Postal Stamp)’ வெளியிட்டுள்ளது இந்திய அஞ்சல் துறை.

பரவிய செய்தி

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் பார்வைக்கு.

இம்மானுயேல் என்ற ஒரு சமூகத் தலைவருக்கு மணிமண்டபம் கட்டுவதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் எந்த காரணத்தினால் இந்த சமூகத் தலைவரை சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி என்று கூறுகிறீர்கள்.

இவர் எந்த ஆண்டு எந்த இடத்தில் யாரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடினார் இவரை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நீங்கள் சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிடுகிறீர்கள்.

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

தியாகி. இம்மானுவேல் சேகரன் எவ்விதமான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்றும், இவருக்கு எப்படி மணிமண்டபம் கட்ட முடியும் என்றும், சுதந்திரதிற்காக போராடியுள்ளார் என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் எனவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

தியாகி. இம்மானுவேல் சேகரன் எவ்விதமான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்று பரவும் செய்தி குறித்து தேடினோம். அப்போது Mintage World என்ற இணையப்பக்கத்தில் ”Remembering brave leader of India: Immanuel Sekaran” என்ற தலைப்பில் அக்டோபர் 09, 2020 அன்று பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் இம்மானுவேல் சேகரன் 1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, The South First ஊடகத்தில் செப்டம்பர் 12, 2024 அன்று தியாகி. இம்மானுவேல் சேகரன் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கை அங்கீகரித்து, இந்திய அஞ்சல் துறை அவருக்கு ‘அஞ்சல் தலை (Postal Stamp)’ வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, தியாகி. இம்மானுவேல் சேகரன் எவ்விதமான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்று சாதி ஆதிக்கவாதிகளால் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. 1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க