YouTurn

மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று பரவும் செய்தி!

மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று பரவும் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2021 நவம்பர் 15 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரவிய செய்தி

அவசர கதியில் பிணக்கூராய்வு ஏன்?

மாலை 6 மணிக்கு மேல் பிணக்கூராய்வு செய்யக்கூடாது என்ற விதி இருந்தும் அவசரமாக பிணக்கூராய்வு செய்தது ஏன்? இவ்வளவு விரைவாக அடக்கம் செய்யப்பட வேண்டுமா?

மரணங்கள் குறித்து அறிவியல் பூர்வமான காரணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

39 பேரின் பிணக்கூராய்வு அறிக்கை விபரங்கள் என்ன?

மனித உரிமை ஆர்வலர் எவிடென்ஸ் கதிர்

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் பலியாகினர். இதையடுத்து இரவோடு இரவாக உயிரிழந்த உடல்களும் அனைத்து பிரதே பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் பிணக்கூராய்வு செய்யக்கூடாது என்ற விதி இருந்தும் அவசரமாக பிரதே பரிசோதனை செய்தது ஏன் என்றும், இவ்வளவு விரைவாக அடக்கம் செய்யப்பட வேண்டுமா எனவும் மனித உரிமை ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் கேள்வி எழுப்பியுள்ளார். 


உண்மை என்ன? 

இது குறித்து தேடிய போது, 2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, “Now, postmortems can be performed after sunset” என்ற தலைப்பில் The Hindu ஊடகத்தில் நவம்பர் 21, 2021 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் உடல் உறுப்பு தானத்திற்கான பிரேத பரிசோதனை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து நடத்துவதற்கான உற்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையில் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

image.png


முடிவு: 

எனவே, கடந்த 2021 நவம்பர் 15 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று குறிப்பிட்டு தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க