YouTurn

பாகிஸ்தானை அழித்துவிடுவதாக டிரம்ப் பேசும் வீடியோ! உண்மையா? போலியா?

பாகிஸ்தானை அழித்துவிடுவதாக டிரம்ப் பேசும் வீடியோ! உண்மையா? போலியா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

டிரம்ப் பேசிய பழைய வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியான ஆடியோவை இணைத்து உருவாக்கப்பட்ட போலியான வீடியோ.

பரவிய செய்தி

நான் போரை விரும்பவில்லை அமைதியை தான் விரும்புகிறேன் இருந்தாலும் ஒருவேளை பாகிஸ்தான் இந்தியாவை தாக்கினால் நான் இந்தியா பக்கம் நிற்பதுடன் பாகிஸ்தானை அழிக்கவும் செய்வேன் ஏனெனில் எனக்கு இந்திய மக்களை மிகவும் பிடிக்கும். - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்!


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 28 நபர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அட்டாரி - வாஹா எல்லையை மூடுவது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது ஆகிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், ’இந்தியா தங்களை இராணுவ ரீதியாக தாக்க வாய்ப்புகள் உள்ளதாக’ உளவு தகவல் வந்ததாக பாகிஸ்தான் கூறுகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூள வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.


இந்நிலையில், ’நான் போரை விரும்பவில்லை அமைதியை தான் விரும்புகிறேன். இருந்தாலும் ஒருவேளை பாகிஸ்தான் இந்தியாவை தாக்கினால் நான் இந்தியா பக்கம் நிற்பதுடன் பாகிஸ்தானை அழித்துவிடுவேன்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுவதாக ஒரு காணோளி பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Bloomberg Television’ செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. பரப்பப்படும் வீடியோவில் உள்ளதைப் போல் பின்புலத்தில் ‘The Economic Club of New York’ என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து, பரப்பப்படுவது இந்த வீடியோதான் என்பதை உறுதிசெய்ய முடிகிறது.


image.png


இந்த வீடியோவின் அடிக்குறிப்பில், “2016 செப்டம்பர் 15 அன்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது திட்டம் பற்றி Economic Club of New York-ல் பேசினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்வில் டிரம்ப் பேசியது குறித்து மேலும் தேடுகையில்,  ‘Economic Club of New York’ வலைத்தளத்தில் டிரம்ப் பேச்சின் Transcript இருப்பதைக் காணமுடிந்தது. இந்த முழு பேச்சிலும் ‘India, Pakistan’ போன்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை என்பதைக் காண்கிறோம். பொருளாதார குறித்துதான் இந்த பேச்சு இருந்தது. 



இதனால், இந்த வீடியோவை ‘Hive Moderation’ என்னும் தளத்தில் சோதனை செய்தோம். அதில், இந்த வீடியோ உண்மையானது என்றும், அதிலுள்ள ஆடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, டிரம்ப் பேசிய பழைய வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியான ஆடியோவை இணைத்து பொய் செய்தியை பரப்பிவருகின்றனர்.


முடிவு:


கடந்த 2016ஆம் ஆண்டு டிரம்ப் பேசிய வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான ஆடியோவை இணைத்து பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க