YouTurn

Sanitary pad-ல் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

 Sanitary pad-ல் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

Sanitary pads இருக்கும் பெட்டியில் (Box) ராகுல் காந்தி புகைப்படம் இருந்ததை திரித்து, Sanitary pad-லே ராகுல் காந்தி புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதாக தவறாக பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் படத்தை வைத்து பெண்களுக்கு 5 லட்சம் சானிட்டரி பேட்களை காங்கிரஸ் கட்சி வழங்கவுள்ளது.


image.png


X Link


விரிவான விளக்கம்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் Sanitary pad-ல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பது போன்ற வீடியோவை பதிவிட்டு, பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 5 லட்சம் பெண்களுக்கு சானிட்டரி பேட்கள் கொடுக்கப்பட்டதாகவும், அவற்றில் சானிட்டரி பேட்கள் இருக்கும் பெட்டியில் மட்டுமல்ல ஒவ்வொரு பேட்களிலும் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பதாகவும் பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த தகவல் பற்றி இணையத்தில் தேடியதில் ‘India Today’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அந்த செய்தியில்,  ‘பிரியதர்ஷினி உதான் யோஜனா’ என்ற திட்டத்தை பீகாரில் காங்கிரஸ் செயல்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மையநோக்கம் என்பது பெண்கள் மத்தியில் மதவிடாய் காலத்து சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.


image.png

 

அந்த வகையில், பீகாரில் உள்ள பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக  Sanitary pads வழக்கப்படுகிறது. அந்த  Sanitary pads இருக்கும் பெட்டியில் ராகுல் காந்தியின் புகைப்படமும், பீகாரில் நளிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழக்கப்படும் என்ற காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியும் அதில் இடைபெற்றிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், Sanitary pad-ல் ராகுல் காந்தியின் புகைப்படம் இருந்ததாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. 


image.png


மேலும் இதுகுறித்து தேடியதில், ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி,  ‘பிரியதர்ஷினி உதான் யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட Sanitary pad-களில் ராகுல் காந்தியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதாக சொல்லி போலி வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், அது குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து, Sanitary pads இருக்கும் பெட்டியில் (Box) தான் ராகுல் காந்தியின் புகைப்படம் இருந்தது. ஆனால், Sanitary pad-லே ராகுல் காந்தியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதாக திரித்து பரப்பப்படுகிறது.


முடிவு:


Sanitary pads இருக்கும் பெட்டியில் (Box) ராகுல் காந்தி புகைப்படம் இருந்ததை திரித்து, Sanitary pad-ல் ராகுல் காந்தி புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதாக தவறாக பரப்பப்படுகிறது. இவ்வாறு Sanitary pad-ல் ராகுல் காந்தி புகைப்படம் இருப்பதாக பரப்பப்படும் போலி வீடியோ குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க