YouTurn

தமிழ்நாடு பெண் எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் வடை சாப்பிடுவதாகப் பரவும் போலியான புகைப்படம்!

தமிழ்நாடு பெண் எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் வடை சாப்பிடுவதாகப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விஷச்சாராய சாவுகளால் தமிழக பெண்களின் தாலி அறுபடுவதை, அலட்சியம் செய்துவிட்டு தில்லியில் கூத்தடிக்கும் விடியல் போராளிகள்..!


X Link | Archive Link

விரிவான விளக்கம்

18வது மக்களவைக் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கிய நிலையில், புதிய உறுப்பினர்களுக்கு, தற்காலிக மக்களவைத் தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி கருணாநிதி, ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் சில வடமாநில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அமர்ந்திருப்பது போலவும், அவர்களுக்கு முன் உள்ள மேஜையில் வடைகள் இருப்பது போலவும் புகைப்படம் ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.


Instagram Link


உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இதே புகைப்படம் Times of India ஊடகத்தில் "'போராளிகள் திரும்பிவிட்டார்கள்...': நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் மஹுவா மொய்த்ராவின் பதிவு" என்று குறிப்பிடப்பட்டு, ஜூன் 24 அன்று செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.



ஆனால் இதில் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்று மேஜை மீது வாழை இலையில் வடை, சட்னி எதுவும் இல்லை.

மேலும் இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் எக்ஸ் பக்கத்தையும் ஆய்வுசெய்து பார்த்தோம். அதிலும் "போராளிகள் திரும்பிவிட்டார்கள், 2024 vs 2019" என்று குறிப்பிட்டு ஜோதிமணி இரண்டு புகைப்படங்களை பதிவுசெய்திருந்தார். அதில் உண்மையான புகைப்படம் இடம்பெற்றிருந்ததைக் காணமுடிந்தது.



இதன்மூலம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சிலர் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.



முடிவு:

நம் தேடலில், தமிழ்நாடு பெண் எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் மற்ற பெண் எம்.பி.களுடன் அமர்ந்து வடை சாப்பிடுவதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.