யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் இந்தியா வந்த போது அவரை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
அர்னாப் கோஸ்வாமி இந்தப் புகைப்படத்தைக் காட்டாததற்கு ராகுலே நன்றியுடன் இருங்கள். இல்லையெனில், புருஷன் உயிருடன் இருக்கும்போது, அடுத்தவன் மடியில் உட்கார்ந்திருந்தால் அவள் விதவையாகி விடுவாள்.

விரிவான விளக்கம்
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, வயதான தோற்றம் கொண்ட ஒருவரின் மடியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது வாட்சாப் பதிவுகளில் அதிகமாக பரவி வருவதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், புகைப்படத்தில் இருப்பவர் முன்னாள் மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் என்பதை அறிய முடிந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் இந்தியா வந்த போது அவரை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதை ‘getty images” இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த புகைப்படத்தின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் உண்மையான புகைப்படத்தில் இருவரும் தனி தனி இருக்கைகளில் அமர்ந்தே பேசுகின்றனர். இதனை எடிட் செய்து பலரும் கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:
நம் தேடலில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, ஒருவரின் மடியில் அமர்ந்திருப்பதைப் போன்று பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.