யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
எங்கோ ஒரு மூளையில் பகுத்தறிவு வகுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கோ எவனோ பார்ப்பணியத்திற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருப்பான்...
யாருங்க அது சொம்பு தூக்கறது?
இவரை தெரியாதா? இவர் தான் தமிழ்நாட்டின் எலான் மாஸ்க்
மாப்பிள்ளை சார்

விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோயிலில் அர்ச்சகர் உடன் சென்று கொண்டிருக்கும் போது, கையில் சொம்பு வைத்திருப்பது போன்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது விகடன் ஊடகத்தில் “திருச்செந்தூர்: சிறப்பு யாகம்... பக்தர்களுக்கு மறுப்பு; சபரீசனுக்கு மட்டும் அனுமதியா?- பாஜக கேள்வி” என்ற தலைப்பில், பரவி வரும் புகைப்படத்துடன் ஆகஸ்ட் 03,2022 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பது போன்று எந்த காட்சிகளும் இல்லை. மேலும் அந்த செய்தியில் திருச்செந்தூர் முருகன் கோயிலில், சிறப்பு யாகத்தில் சபரீசனுடன் அவர் நண்பர் வெங்கட்டும் கலந்துகொண்டார். யாகம் முடிவடைந்த பின்னர் இருவரும் சுவாமி தரிசனத்துக்காகச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் top tamil news ஊடகப்பத்திலும், ”முதல்வரின் மருமகன் சபரீசன் சிறப்பு யாகம்! கொதித்தெழுந்த பக்தர்கள்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 03, 2022 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த புகைப்படத்திலும், சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பது போன்று எதுவும் இல்லை.

இதிலிருந்து பரவி வரும் புகைப்படம் எடிட் செய்து பரப்பப்படுவது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.