YouTurn

ராகுல் காந்தியின் சட்டை குறித்துப் பரவும் போலியான புகைப்படம்!

ராகுல் காந்தியின் சட்டை குறித்துப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022-ல் மைசூரில் நடைபெற்ற பேரணி ஒன்றில், மழையில் நனைந்தபடியே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதை எடிட் செய்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

பாவம்...ராகுல் மழையில் நனைஞ்ச இந்த போட்டோவை போட்டு எல்லோரும் சிரிக்கிறாங்க.. ஆனா ஏன்னே எனக்கு தெரியல 🙄🙄 உங்களுக்காவது ஏதாவது தெரிஞ்சதா..??



Facebook Link | Archive Link

விரிவான விளக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மழையில் நனைந்தபடி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவர் சட்டைக்குள் உள்ளாடை அணிந்திருப்பதைப் பாருங்கள் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.  



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘Deccan Herald’ கடந்த 2022-ல் வெளியிட்ட செய்தியின் பக்கத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது.  


பாரத் ஜோடோ யாத்திரை: மழையில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்; படங்கள் வைரலாகின்றன“ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், மைசூரில் ராகுல் காந்தி மழையில் நனைந்தபடி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள உண்மையான புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. 


இதே போன்று, ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும், கடந்த 2022-ல் பாரத் ஜோடா யாத்திரையின் போது மழையில் நனைந்தபடியே ஆற்றிய உரை குறித்து வீடியோ பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.



இந்நிலையில் ராகுல் காந்தியின் உண்மையான புகைப்படத்தை, அவர் தனது சட்டைக்குள் உள்ளாடை அணிந்திருப்பது போன்று எடிட் செய்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முடிவு: 


நம் தேடலில், ராகுல் காந்தி தனது சட்டைக்குள் உள்ளாடை அணிந்திருப்பதைப் போன்று பரவி வரும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க