யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வைரலாகப் பரவிவரும் “தி இந்து” செய்தித்தாளின் முதல் பக்கம் போலியானது என்றும், அது தங்களின் ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் 'தி இந்து' அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
பரவிய செய்தி
5 June 1967...
For those mocking Modi ji

விரிவான விளக்கம்
தங்கம் இறக்குமதிக்காக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகம் செலவிடப்படுவதை தடுக்கும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் 1967 ஆம் ஆண்டு தங்கம் வாங்குவதை நிறுத்துமாறு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக The Hindu செய்தித்தாளின் முதல் பக்கத்தை பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
The Hindu செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இப்படியான செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படியான எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது The Hindu ஊடகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மே 12, 2026 அன்று ஒரு பதிவு வெளியிட்டுருந்தது. அதில் வைரலாகப் பரவிவரும் “தி இந்து” செய்தித்தாளின் முதல் பக்கம் போலியானது என்றும், அது தங்களின் ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் தெளிவுப் படுத்திருந்தது.
📢 A digitally altered image purporting to be a front page of The Hindu from June 6, 1967, is currently circulating on social media. We wish to clarify that this is not an authentic page from our archives. The Hindu urges readers to exercise caution and verify before sharing.
அதே போல் The Hindu செய்திதாளின் தலைமை ஆசிரியர் சுரேஷ் நம்பத் மே 12 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில் போலிப் படங்களை வெளியிடாதீர்கள் என்றும், இதற்கும் the hindu-விற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டுருந்தார்.
Don't post fake images; this has nothing to do with @the_hindu
முடிவு:
எனவே, 1967 ஆம் ஆண்டு தங்கம் வாங்குவதை நிறுத்துமாறு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக பரவும் செய்தித்தாளின் புகைப்படம் போலியானது.