YouTurn

தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததா? உண்மை என்ன?

தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“தெருவில் ஆதரவற்ற நாய்களுக்கு, உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது. இது குறித்து சன் நியூஸ் எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை.

பரவிய செய்தி

“உணவளிப்பது குற்றமல்ல, உரிமை!” 

தெருநாய்களுக்கு உணவு அளிப்பது மனிதத்துவத்தின் அடையாளம்.

இனி உணவளிப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை

உணவளிப்பவர்களின் குரலை வலுப்படுத்தியதற்கு மதிப்பும் மரியாதையும்!

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை, தெருநாய்களுக்கு உணவு அளிப்பதைத் தடுக்கிறவர்கள் அல்லது உணவளிப்பவர்களைத் தொந்தரவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவளிப்பவர்கள் தங்கள் இடங்களில் அமைதியாக உணவு அளிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாக சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த நியூஸ் கார்ட் குறித்து, சன் நியூஸ் ஊடகப்பக்கத்தில் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அதில் கடந்த ஆகஸ்ட் 22 அன்று, ”தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது.. - உச்ச நீதிமன்றம்” என்று குறிப்பிட்டு, ஒரு நியூஸ் கார்ட் வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து வேறு ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். சிறப்புப் பகுதிகள் தவிர, தெருக்கள் மற்றும் பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பதை உச்ச நீதிமன்றம் தடை செய்கிறது என்றே செய்திகள் வெளியாகியிருந்தது. 


தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து சன் நியூஸ் ஊடகத்தை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் இந்த நியூஸ் கார்ட் போலியானது என்றும், அதிலுள்ள செய்தியும் உண்மையில்லை எனவும் விளக்கமளித்தனர். 


இதற்கு முன்பும் இதே போல் சமூகவலத்தளங்களில் பரவிய போலி நியூஸ் கார்ட் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம். 


மேலும் படிக்க : 

ரேஷன் கடைகளிலும் இலவசமாக கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறியதாக பரவும் போலியான நியுஸ் கார்ட்!


SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இடஒதுக்கீடு அவசியமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக பரவும் நியூஸ் கார்ட்!


முடிவு: 

எனவே, “தெருவில் ஆதரவற்ற நாய்களுக்கு, உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது. இது குறித்து சன் நியூஸ் எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க