YouTurn

ராகுல் காந்தியின் வீடியோவின் வியூஸ் அதிகரிக்கக் காங்கிரஸ் செய்யும் செயல் எனப் பரவும் பொய்!

ராகுல் காந்தியின் வீடியோவின் வியூஸ் அதிகரிக்கக் காங்கிரஸ் செய்யும் செயல் எனப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவை அல்லது பிரதமர் மோடியை புகழ்ந்து Social Media வில் பதிவிடும் போது நம்மை உடனே 20-30 காங்கிரஸ்காரன் எப்படி ஆபாசமாக கமென்டில் திட்டுறானுக & ராகுல் காந்தி விடியோவுக்கு எப்படி அதிகம் வியூஸ் வாங்குறோம் என்ற ரகசியத்தை வெளியிட்டகேளா காங்கிரஸ்


X link





விரிவான விளக்கம்

'இந்தியா அல்லது மோடியைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிடும்போது காங்கிரஸ்காரர்கள் எப்படி உடனே கமெண்டில் வந்து திட்டுகிறார்கள் என்பது பற்றியும் ராகுல் காந்தியின் வீடியோவுக்கு எப்படி அதிக வியூஸ் வருகிறது என்பது பற்றியும் ரகசியத்தைக் கேரளா காங்கிரஸ் கட்சி வெளியிட்டது' என வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?

கேரளா காங்கிரஸ் இந்த வீடியோவை வெளியிட்டதாக பரவக்கூடிய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து தேடினோம். அவர்களது எக்ஸ் பக்கத்தில் ஜூன் 29ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப் பட்டுள்ளது. பாஜகவின் ஐடி விங்கை குறிக்கும் வகையில் அப்பதிவு அமைந்துள்ளது. மேலும் இது ’Representative video’ என்பதையும் சேர்த்து கேரளா காங்கிரஸ் பதிவிட்டுள்ளனர். 



மேற்கொண்டு பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமெஜ் செர்ச் மூலம் தேடினோம். இந்த வீடியோவை ‘Nau TV’ என்ற டிக்டாக் பக்கத்தில் சீனாவில் 'view phone farm' என்று பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. டிக்டாக்கில் இப்படியான பல வீடியோக்கள் உள்ளன.



மேலும் பரவக்கூடிய வீடியோவில் ‘MIN Software’ என்கிற பெயர் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டை ஒரு பணியாளர் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக்கொண்டு தேடியதில் இந்த நிறுவனம் வியட்நாமில் இருப்பதை அறியமுடிந்தது. இந்நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



பாஜகவின் ஐடி விங் பற்றி கேரளா காங்கிரஸ் விமர்சித்ததைத் தொடர்ந்து, அதே வீடியோவை பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் விதமாக பதிவிட்டுள்ளனர். போலியான social media traffic-ஐ அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன என்பது நீண்டகாலமாக இருக்கும் குற்றச்சாட்டாகும். அப்படி இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி விமர்சிக்க ஒரே வீடியோவை பயன்படுத்தியுள்ளது.

அப்படி காங்கிரஸ் தனது பதிவில் ’Representative’ என்பதை தெளிவாக குறிப்பிட்டுவிட்டது. ஆனால், பாஜகவின் பதிவிலோ அந்த வீடியோ காங்கிரசின் ஐடி விங் அலுவலகத்தில் எடுக்கப்பட்டது போன்று தவறான குறிப்பிட்டுள்ளது.

ஒரு வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டுவதற்கும் அல்லது ஒரு பதிவை அதிகமானவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்கும் போலியான social media traffic உருவாக்கப்படுவது உண்டு. இதுதொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. 

ஆனால், பரவக்கூடிய வீடியோ அத்தகையதா என்பதும் அது எங்கு எடுக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளும் தங்களது பிரச்சாரத்திற்காக இந்த வீடியோவை பயன்படுத்துகின்றனர் என்பது உறுதியாகிறது. 

முடிவு: 

ராகுல் காந்தியின் வீடியோவுக்கு அதிக வியூஸ் வரச் செய்யப்படும் யுக்தி என பாஜகவினர் பரப்பும் தகவல் உண்மை அல்ல.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க