யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
மன்மோகன் சிங் Mind voice… இந்த போட்டோஷூட் எப்போது நடந்தது? ஏன் யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை?

விரிவான விளக்கம்
மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
இதற்கு முன்னர் இந்திய அணி 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களுக்கு தெரியாமல் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மட்டும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
எஸ்.ஆர்.சேகர் பதிவிட்ட புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடினோம். இந்திய அணி டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவ்வீரர்களைச் சோனியா காந்தி 2007ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி சந்தித்ததாக ‘Getty Images’ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு 'மன்மோகன் சிங் இந்திய வீரர்களைச் சந்தித்தாரா?' என்பதையும் இணையத்தில் தேடினோம். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து மன்மோகன் சிங் இந்திய வீரர்களைச் சந்தித்துப் பேசியது மற்றும் அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டது இந்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இப்புகைப்படம் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி எடுக்கப்பட்டதாக அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[caption id="attachment_56888" align="aligncenter" width="500"]
The Prime Minister, Dr. Manmohan Singh with the Twenty-Twenty Cricket Team, in New Delhi on October 30, 2007.[/caption]
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வேறு சில படங்களின் தொகுப்பு ‘India Times’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து, 2007 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் சந்திக்கவில்லை எனப் பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
இந்திய கிரிக்கெட் அணி 2007ல் டி20 உலகக் கோப்பையை வெற்றி பெற்றபோது மன்மோகன் சிங் அவ்வீரர்களைச் சந்திக்கவில்லை எனப் பாஜகவினர் பரப்பும் தகவல் உண்மை அல்ல.
மன்மோகன் சிங் Mind voice...
இந்த போட்டோஷூட் எப்போது நடந்தது?
ஏன் யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை? pic.twitter.com/UDNMbwq0Jm
— S.R.SEKHAR (@SRSekharBJP) June 30, 2024
இதற்கு முன்னர் இந்திய அணி 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களுக்கு தெரியாமல் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மட்டும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
எஸ்.ஆர்.சேகர் பதிவிட்ட புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடினோம். இந்திய அணி டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவ்வீரர்களைச் சோனியா காந்தி 2007ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி சந்தித்ததாக ‘Getty Images’ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு 'மன்மோகன் சிங் இந்திய வீரர்களைச் சந்தித்தாரா?' என்பதையும் இணையத்தில் தேடினோம். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து மன்மோகன் சிங் இந்திய வீரர்களைச் சந்தித்துப் பேசியது மற்றும் அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டது இந்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இப்புகைப்படம் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி எடுக்கப்பட்டதாக அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[caption id="attachment_56888" align="aligncenter" width="500"]
The Prime Minister, Dr. Manmohan Singh with the Twenty-Twenty Cricket Team, in New Delhi on October 30, 2007.[/caption]இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வேறு சில படங்களின் தொகுப்பு ‘India Times’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.