யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஈரான் செல்லும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் என்று பரவும் நியூஸ் கார்ட் போலியானது. இது குறித்து youturn தரப்பில் தந்தி டிவி ஊடகத்தை தொடர்புக் கொண்டு கேட்டப் போது, இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஈரான் செல்கிறார் என்று தந்தி டிவி ஊடகத்தில் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
அப்போ அந்த மூன்று நாட்களுக்கு அறிவாலயத்துல யாரு அடைப்பு எடுக்குறது.... 😂😂 pic.twitter.com/Oxt1rQ0FAT
உண்மை என்ன?
பரவி வரும் இந்த நியூஸ் கார்ட் குறித்து முதலில் தந்தி ஊடகத்தின் சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். ஆனால் இப்படியான எந்த நியூஸ் கார்டும் அங்கு வெளியாகவில்லை.
இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்டில் 04.03.2026 என்று தேடிக் குறிப்பிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. தந்தி டிவி ஊடகத்தில் இதை தேடிப் பார்த்த போது, அதே தேதியில் மற்றொரு நியூஸ் கார்ட் வெளியானதை பார்க்கமுடிந்தது. அதில் காமேனியின் 3 நாள் இறுதிச்சடங்கு தெக்ரானில் இமாம் காமேனி தொழுகை கூடத்தில் மார்ச் 04 அன்று இரவு தொடக்கம் என்றும், காமேனி உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை தான் எடிட் செய்து பரப்புகின்றனர் என்பது தெரியவந்தது.
காமெனியின் 3 நாள் இறுதிச்சடங்கு தெக்ரானில் இமாம் கொமேனி தொழுகை கூடத்தில் இன்று இரவு தொடக்கம்
காமெனி உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படுகிறது#Khameneifuneral #iran #war #ImamKhomeiniShrine #ThanthiTV pic.twitter.com/WBkweNU4yz
இதை உறுதிச் செய்ய youturn தரப்பில் இருந்து தந்தி டிவி ஊடகத்திற்கு தொடர்புக் கொண்டு இந்த நியூஸ் கார்ட் குறித்து கேட்டோம். அப்போது இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர்.
முடிவு:
எனவே, காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஈரான் செல்லும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் என்று பரவும் நியூஸ் கார்ட் போலியானது. இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை தந்தி ஊடகம் உறுதிச் செய்தனர்.
