யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Youturn தரப்பில், News Tamil 24×7 ஊடகத்தை தொடர்புக் கொண்டு கேட்டப் போது, இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர். மேலும் ஸ்ரீ சாய்பாபா இண்டேன் கேஸ் ஏஜென்சீஸ் என்ற பெயர் பலகையை, நயினார் இண்டேன் கேஸ் ஏஜென்சி என்று எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் காரணமாக உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள், போக்குவரத்து வாகனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேஸ் கிடைக்காததால் திருநெல்வேலியில் உள்ள அவரது கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று News Tamil 24×7 ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
யோவ் நாலு கோடி நயினார்
என்னய்யா இது 🙄
இவ்வளவு ஈனத்தனமா பொய் பேசற 😏 @NainarBJP pic.twitter.com/8qMjaO9Lq7
வாயை கொடுத்து.. pic.twitter.com/9Lk6dqUzVq
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் இந்த நியூஸ் கார்ட் குறித்து News Tamil 24×7 ஊடகத்தின் சமூக வலைதளப்பக்கங்களில் தேடினோம். ஆனால் இப்படியான எந்த நியூஸ் கார்டும் அங்கு வெளியாகவில்லை.
இதையடுத்து அந்த நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது நயினார் இண்டேன் கேஸ் ஏஜென்சி என்ற பெயர் பலகை போல், Just Dial பக்கத்தில் ஒரு புகைப்படம் கிடைத்தது. அதில் ஸ்ரீ சாய்பாபா இண்டேன் கேஸ் ஏஜென்சீஸ் என்ற பெயர் இருந்தது. இதிலிருந்தது இந்த பெயர் பலகையை தான், நயினார் இண்டேன் கேஸ் ஏஜென்சி என்று எடிட் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதை உறுதிச் செய்ய Youturn தரப்பில் இருந்து News Tamil 24×7 ஊடகத்திற்கு தொடர்புக் கொண்டு இந்த நியூஸ் கார்ட் குறித்து கேட்டோம். அப்போது இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர்.
முடிவு:
எனவே, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் நியூஸ் கார்ட் போலியானது. இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை News Tamil 24×7 ஊடகம் உறுதிச் செய்தனர்.
