YouTurn

ஃபியூஸ் கேரியர் திருடிய திமுக தொண்டர்கள் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

ஃபியூஸ் கேரியர் திருடிய திமுக தொண்டர்கள் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது போன்று பரவும் நியூஸ்கார்டு உண்மையானதல்ல. எடிட் செய்யப்பட்டது.

பரவிய செய்தி

இப்பதான் விசயம் கேள்விபட்டேன்

திருட்டு பசங்க

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல பகுதிகளில் மின்சார வெட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதையடுத்து ஃபியூஸ் கேரியர்கள் திருடப்படுவதே மின்வெட்டுக்கு காரணம் என்று மின்வாரிய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆவடியில் மின்சார ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இவர்கள் தி.மு.க-வை சார்ந்தவர்கள் என்று த.வெ.க-வினர் சன் நியூஸ் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


உண்மை என்ன? 

பரவி வரும் நியூஸ் கார்டில் 09 ஜூன் 2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்து சன் நியூஸ் ஊடகத்தின் சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது அதில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜூன் 09 அன்று நியூஸ் கார்ட் வெளியிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால் அதில் அவர்கள் இருவரும் கட்சிக் கொடி துண்டு எதையும் அணிந்திருக்கவில்லை.  


இதை மேலும் உறுதி செய்ய பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து சன் நியூஸ் ஊடகத்தை தொடர்புக் கொண்டு கேட்டப் போது, இது தொடர்பான நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தனர். 


முடிவு:

எனவே, ஆவடியில் ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க துண்டு அணிந்திருப்பது போல் பரவும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவானது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க