YouTurn

முத்ரா திட்டம் மூலம் ஒன்றிய அரசு ரூ.5000 வழங்குவதாக பரவும் போலியான செய்தி!

முத்ரா திட்டம் மூலம் ஒன்றிய அரசு ரூ.5000 வழங்குவதாக பரவும் போலியான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நம் தேடலில் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் ஒன்றிய அரசு இலவசமாக ரூ.5000 வழங்குவதாக பரவும் செய்தி போலியானவை. ஒன்றிய அரசு மட்டுமல்ல, எந்த ஒரு அரசும், தனியார் நிறுவனமும் இப்படி இணைய இணைப்புகளை கிளிக் செய்தால் பணம் வழங்கும் என்றெல்லாம் அறிவிக்காது.

பரவிய செய்தி

Transfer to the account now

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் மத்திய அரசு வழங்கும் ரூ.5000 உங்கள் கணக்கில் இலவசத் திட்டம். இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் கணக்கில் பணத்தைப் பெறுங்கள் என்று வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதே போன்று, கொடியை கிளிக் செய்யவும் ரூ.5000 நேரடியாக கணக்கில். இன்றே உங்கள் வாய்ப்பு என்று குறிப்பிட்டு மற்றொரு பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடிப் பார்த்தோம். இந்தியக் குடிமக்களுக்கு நேரடியாக ஒரு லிங்க்கை தொடுவதன் மூலமோ, இணையத்தில் பதிவு செய்வதன் மூலமோ ரூ.5000 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. 


இதையடுத்து முத்ரா இணையதளப்பக்கத்தில் இது போன்ற அறிவிப்பு ஏதேனும் வெளியாகியுள்ளதா என்பதையும் தேடினோம். அப்போது அந்த பக்கத்தின் முகப்பில், முத்ரா லிமிடெட் நிறுவனம் தனிநபர்களுக்கு முத்ரா கடன்களை நேரடியாக வழங்குவதில்லை என்றும், அத்தகைய கடன்களை வங்கிகள்/ வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/ நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுருந்தது.

image.png


மேலும் இத்தகைய கடன்களைப் பெறுவதற்காக முத்ரா நிறுவனத்தால் எந்த முகவர்களோ அல்லது இடைத்தரகர்களோ நியமிக்கப்படவில்லை என்றும், முத்ரா/பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் முகவர்கள்/உதவியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களிடமிருந்து கடன் பெறுபவர்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடினோம். அப்போது 2025ஆம் ஆண்டு சட்டக் காப்பீட்டுக் கட்டணமாக ₹36,500 செலுத்தினால், 𝐏𝐌 முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ₹3,00,000 கடன் வழங்குவதாக இதே போன்று ஒரு செய்தி பரவுள்ளதை பார்க்கமுடிந்தது. அதை போலியானது என்று ஒன்றிய அரசின் PIB உண்மைச் சரிபார்ப்பு குழு உறுதி செய்திருந்ததையும் காணமுடிந்தது. 


முடிவு: 

எனவே, நம் தேடலில் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் ஒன்றிய அரசு இலவசமாக ரூ.5000 வழங்குவதாக பரவும் செய்தி போலியானவை. ஒன்றிய அரசு மட்டுமல்ல, எந்த ஒரு அரசும், தனியார் நிறுவனமும் இப்படி இணைய இணைப்புகளை கிளிக் செய்தால் பணம் வழங்கும் என்றெல்லாம் அறிவிக்காது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க