யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சைந்தவி குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ‘At Home’ என்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பொது விழா ஒன்றில் பின்னணி பாடகி சைந்தவி Scarf ஒன்றை அணிந்து பங்கேற்றிருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘சைந்தவி பாஜகவில் இணைந்துவிட்டதாக’ பரப்புகிறார்கள்.
வாழ்த்துக்கள் pic.twitter.com/7BUuzSNtDj
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இந்த புகைப்படத்தைக் கொண்டு ’Lokmat Times’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதியன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு “At Home” வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில், பின்னணி பாடகி சைந்தவியும் கலந்துகொண்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டது குறித்து சைந்தவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் போது சைந்தவி அணிந்திருக்கும் அந்த ’Scarf’-ல் பாஜகவின் கொடியோ, சின்னமோ இருக்கவில்லை. அது ஆசாம் மாநில மக்களால் பாரம்பரியமாக அணியப்படும் துண்டு போன்ற துணியாகும். அதனை ’Assamese Gamosa’ என்று அழைப்பார்கள். இது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு-வால் வழங்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்ததாக பரப்பப்படுவது பொய்யான தகவல் என்பது உறுதியாகிறது.
முடிவு:
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ‘At Home’ என்ற நிகழ்வில் கலந்துகொண்ட சைந்தவியை, அவர் பாஜகவில் இணைந்துவிட்டதாக பொய்யான தகவலை பரப்பிவருகிறார்கள்.
