யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) போலியாக உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியும் நேருக்கு நேர் நின்று காரசாரமாக வாக்குவாதம் செய்வதாக, குறிப்பாக ராகுல் காந்தி மோடியை விரல் நீட்டி பேசுவது போன்ற ஒரு புகைப்படம் காங்கிரஸ் ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடினோம். செய்தித்தளங்களிலோ, சமூக வலைத்தள பக்கங்களிலோ எதிலும் இந்த புகைப்படத்தைக் காணமுடியவில்லை.

அந்த புகைப்படத்தில் கேமராமேன்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கை வரை கேமராமேன்கள் அனுமதிக்கப்படவதில்லை.
இதனால், இந்த புகைப்படத்தை ‘Hive Moderation’ என்ற தளத்தில் சோதனை செய்தோம். அதிலிருந்து, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) உருவாக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
முடிவு:
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு ராகும் காந்தியும் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.
