
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
கடும் முட்டி வலியுடன் தவழ்ந்தே அயோத்திக்கு வந்த சிலுவம்பாளையம் சில்ற பைய
இப்டி ஒரு பிறவி அடிமை பயல உலகத்துல எங்கயும் பாக்க முடியாது#தவழ்ந்தபாடி_பழனிசாமி#குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு pic.twitter.com/SxAH6nhYGF
— Kovai Mano (@Kovai_Mano) January 22, 2024
கடும் முட்டி வலியுடன் தவழ்ந்தே அயோத்திக்கு வந்த சிலுவம்பாளையம் சில்ற பைய
இப்டி ஒரு பிறவி அடிமை பயல உலகத்துல எங்கயும் பாக்க முடியாது
பாவம் அந்த sdpi #தவழ்ந்தபாடி_பழனிசாமி#குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு #AyodhaRamMandir #Ayodhya pic.twitter.com/BS65IKu5SA
— KAMALAKANNAN MNM (@KAMALA__KANNAN) January 22, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் தேடியதில், இன்று கன்னியாகுமரியில் உள்ள "சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதி" என்ற கோவிலுக்கு பழனிச்சாமி வந்துள்ளதையும், அதன் நேரலை NewsJ யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதையும் காண முடிந்தது.


மேலும் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம், பழனிச்சாமி உள்ளது போன்று எடிட் செய்யப்பட்டு தவறாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ராமர் கோயில் கட்டுவதாகப் பரவும் தவறான தகவல்!
மேலும் படிக்க: 1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக !
முடிவு:
நம் தேடலில், எடப்பாடி பழனிச்சாமி அயோத்தி விழாவில் கலந்து கொண்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.