YouTurn

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக இதுவரை பெற்றது ரூ.6,986.5 கோடி என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக இதுவரை பெற்றது ரூ.6,986.5 கோடி என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

புதிய புள்ளிவிவரங்களின்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது - இந்து தமிழ் திசை



Article Link | Archive Link

விரிவான விளக்கம்

தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், ஏப்ரல் 2019 முதல் 15 பிப்ரவரி 2024 வரையிலான தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 12 அன்று சமர்பித்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இவ்விவரங்களை மார்ச் 14 அன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதில் எந்த நிறுவனம், யாருக்கு எவ்வளவு நன்கொடை வழங்கியது போன்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ முழுமையாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2019 ஏப்ரலுக்கு முந்தைய விவரங்களையும் சேர்த்து தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 17 அன்று தரவுகளை மீண்டும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக இதுவரை ரூ.6,986.5 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது என்று கூறி இந்து தமிழ்திசை, Indian Express, Deccan Herald, The Economic Times, NDTV, The Telegraph, PTI News மற்றும் Business Standard போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 14 மற்றும் மார்ச் 17 அன்று வெளியிட்ட தரவுகளை ஆண்டு வாரியாக கணக்கிட்டுப் பார்த்தோம்.

அதன்படி, நிதியாண்டு 2017-2018 இல் மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு கிடைத்த தொகை 210 கோடி என்பதை அறிய முடிந்தது.



இதே போன்று நிதியாண்டு 2018-2019 இல் 1450.89 கோடியும், நிதியாண்டு 2019-2020 இல் 2555 கோடியும், நிதியாண்டு 2020-2021 இல் 22.38 கோடியும் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது.



நிதியாண்டு 2021-2022 இல் 1033.7 கோடியும், நிதியாண்டு 2022-2023 இல் 1294.15 கோடியும், நிதியாண்டு 2023-2024 இல் (ஏப்ரல் 01, 2023 லிருந்து செப்டம்பர் 30, 2023 வரை) 421.27 கோடியும் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது.



எனவே மார்ச் 17 அன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மார்ச் 2018 லிருந்து செப்டம்பர் 30, 2023 வரை பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்ற தொகை 6,987.40 கோடி. ஆனால் அதில், அப்டோபர் 01, 2023 லிருந்து பிப்ரவரி 15, 2024 வரையில் பாஜக நன்கொடை பெற்ற விபரங்கள் குறித்து எந்த தரவுகளும் காணப்படவில்லை

எனவே மார்ச் 14 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் இருந்து, அப்டோபர் 01, 2023 லிருந்து பிப்ரவரி 15, 2024 வரையிலான காலக்கட்டத்தில் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விபரங்களை கணக்கிட்டோம். அதன்படி பாஜக 1,264.35 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அதன்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக, மார்ச் 2018 முதல் பிப்ரவரி 15, 2024 வரை பெற்ற மொத்த நன்கொடை 8251.75 கோடிஆகும்.

மேலும் ஆண்டு வாரியாக ஆய்வு செய்ததில், அதிகபட்சமாக நிதியாண்டு 2019-2020 இல் மட்டும் பாஜக 2555 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.
நிதியாண்டு 2017-2018 - 210 கோடி

நிதியாண்டு 2018-2019 - 1450.89 கோடி

நிதியாண்டு 2019-2020 -  2555 கோடி

நிதியாண்டு 2020-2021 - 22.38 கோடி

நிதியாண்டு 2021-2022 - 1033.7 கோடி

நிதியாண்டு 2022-2023  - 1294.15 கோடி

நிதியாண்டு 2023-2024 (ஏப்ரல் 01, 2023 லிருந்து செப்டம்பர் 30, 2023 வரை)  - 421.27 கோடி

ப்டோபர் 01, 2023 லிருந்து பிப்ரவரி 15, 2024 வரை - 1,264.35 கோடி

பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற மொத்த நன்கொடை - 8251.75 கோடி

ஆனால் அப்டோபர் 01, 2023 லிருந்து பிப்ரவரி 15, 2024 வரை பாஜக பெற்ற 1,264.35 கோடியை சேர்க்காமல், இந்து தமிழ்திசை, Indian Express, Deccan Herald, The Economic Times, NDTV, The Telegraph, PTI News மற்றும் Business Standard போன்ற ஊடகங்கள் எல்லாம் பாஜக இதுவரை பெற்ற நன்கொடை ரூ.6,986.5 கோடி என்று தவறான தொகையை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க: தேர்தல் பத்திரம் நிதி: வாரிக் குவித்த பாஜக.. ED, IT ரெய்டில் சிக்கிய நிறுவனங்களின் நிதி யாருக்கு?

முடிவு:

நம் தேடலில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக இதுவரை ரூ.6,986.5 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. பாஜக, மார்ச் 2018 முதல் பிப்ரவரி 15, 2024 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற மொத்த நன்கொடை 8251.75 கோடி.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க