YouTurn

நேரு மவுண்ட்பேட்டன் மனைவியுடன் இருப்பதாகப் பரவும் தவறானப் புகைப்படம்!

நேரு மவுண்ட்பேட்டன் மனைவியுடன் இருப்பதாகப் பரவும் தவறானப் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவிற்க்கு சுதந்திரம் கேட்டு மவுண்பேட்டன் மனைவியிடம் நேரு மாமா போராடிய போது..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டனின் மனைவியான எட்வினா மவுண்ட்பேட்டன் உடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் "இந்தியாவிற்கு சுதந்திரம் கேட்டு மவுண்பேட்டன் மனைவியிடம் நேரு போராடிய போது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவி வரும் புகைப்படத்தில் நேருவைப் போன்றே இருக்கும் நபர், பெண் ஒருவரின் கன்னத்தை பிடித்து நிற்பது போன்று உள்ளதைக் காணமுடிகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது.

பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, History Workshop என்ற இணையதளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரை ஹோவர்ட் பிரெண்டன் என்பவர் இயக்கிய 'Drawing The Line'  என்ற நாடகம் பற்றியது. இந்த இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது என்றும் அக்கட்டுரை கூறுகிறது.

அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சுதந்திர நாடுகளை உருவாக்குவதற்காக, 1947 இல் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் கடைசிச் செயலை ஆய்வு செய்யும் ஹோவர்ட் பிரெண்டனின் நாடகம் இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் புகைப்படத்தின் கீழே, 'சிலாஸ் கார்சன் (நேரு), லூசி பிளாக் (எட்வினா மவுண்ட்பேட்டன்) - புகைப்படம், கேத்தரின் ஆஷ்மோர்' என்றும் தலைப்பிட்டு கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் நேரு வேடத்தில் நடித்தவர் பெயர், சிலாஸ் கார்சன் என்பதை உறுதிசெய்ய முடிகிறது.

இதே போன்று, Hampstead Theatre என்ற இணையதளத்திலும், பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் "பிரெண்டனின் வியத்தகு காவியமான 'ட்ராயிங் தி லைன்' (Drawing The Line) நவீன உலகத்தை வடிவமைத்த பிரிவினையின் குழப்பமான கதையை தெளிவாக வெளிப்படுத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



இதன்மூலம் பரவி வரும் புகைப்படம், 'ட்ராயிங் தி லைன்' (Drawing The Line) என்ற நாடகத்தில் இடம்பெற்றுள்ள காட்சி என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்துப் பரப்பப்பட்ட பொய்களின் தொகுப்பு !

முடிவு:

நம் தேடலில், நேரு மவுண்ட்பேட்டன் மனைவியுடன் இருப்பதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.