YouTurn

தமிழ்நாட்டில் நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவே நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

பரவிய செய்தி

பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம்: நகை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம் என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறி தினகரன் ஊடகம், எந்த இடம் என்று குறிப்பிடாமல் நியூஸ் கார்ட் ஒன்று வெளியிட்டுள்ளது. தற்போது இது தமிழ்நாட்டில் வெளியிட்ட அறிவிப்பு என்று பலரும் comment செய்து வருகின்றனர். 


உண்மை என்ன? 

பரவி வரும் செய்தி குறித்து keywords மூலம் கூகுளில் தேடினோம். அப்போது சமயம் தமிழ் ஊடகத்தில், ”நகைக் கடையில் புது ரூல்ஸ்.. புர்கா அணிந்து வரக் கூடாது.. சர்ச்சையை கிளப்பிய புது ரூல்ஸ்!” என்ற தலைப்பில் ஜனவரி 11, 2026 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் வாரணாசியில் உள்ள உத்தரபிரதேச நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் (UPJA) உள்ளூர் பிரிவு, பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா , மாஸ்க், ஸ்கிரீன் மற்றும் ஹெல்மெட் அணிந்த வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. சமீபத்தில் நடந்த திருட்டு மற்றும் மோசடி சம்பவங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் The Hindu ஊடகத்திலும், திருட்டு சம்பவங்களை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாப், முகமூடி, தலைக்கவசம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


முடிவு : 

எனவே, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவே நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. தினகரன் ஊடகம் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நியூஸ்கார்டில், இடம் குறித்து குறிக்கப்படாததால், தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க