YouTurn

ராகுல் காந்தி இந்து கடவுள் சிலையை வாங்காமல் அவமதித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

ராகுல் காந்தி இந்து கடவுள் சிலையை வாங்காமல் அவமதித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

புனிதமான ஹிந்து தெய்வத்தை அவமதித்த ராகுல் காந்தி : கடும் கோபத்தில் மக்கள் !


 X link 

விரிவான விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு நிகழ்ச்சி மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இந்து மத கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும் விட்டல் (Vitthal) சிலை ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார் என வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 


X link


இதனை பாஜக-வின் ஐடி விங் தலைவர் அமித் மாளவியா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை தமிழ்நாடு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரீடிவிட் செய்துள்ளார். பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். மீடியான் என்னும் இணைய தளமும் இத்தகவலைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. 

உண்மை என்ன?

ராகுல் காந்தி இந்து கடவுளை அவமதித்து விட்டதாக பாஜகவினர் 31 வினாடி வீடியோவை பரப்புகின்றனர். அதன் முழு வீடியோ ராகுல் காந்தியின் அதிகாரப் பூர்வ யூடியூப் பக்கத்தில் நேற்றைய தினம் (மார்ச், 14) பதிவிடப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை அந்த வீடியோவில் உள்ளது. அதில், 17வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய பகுதி இடம் பெற்றுள்ளது. 



கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் சிலர் ராகுல் காந்திக்கு மாலை மரியாதையுடன் நினைவுப் பரிசுகளை வழங்குகின்றனர். அப்போது விட்டல் சிலையுடன் ஒருவர் ராகுல் காந்தி அருகில் நின்றுகொண்டுள்ளார். பிறகு ராகுலிடம் அந்த சிலை வழங்கப்படுகிறது. அவர் அதை பெற்றுக் கொள்வதை வீடியோவில் காண முடிகிறது. 



அவர் சிலையைப் பெறுவதை வீடியோவில் இருந்து கட் செய்துவிட்டு, அவர் இந்து கடவுளை அவமதித்ததாக ஒரு தவறான தகவல்  பாஜகவினரால் பரப்பப்படுகிறது.

மேலும் படிக்க : ராகுல் காந்தி கையில் உள்ள பேட்சில் 420 என இருப்பதாகச் சரவண பிரசாத் பரப்பிய எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

ராகுல் காந்தி குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ராகுல் காந்தி பாகிஸ்தானிலிருந்து வந்தவரா என அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டதாகப் பரவும் பொய் செய்தி !

முடிவு : 

ராகுல் காந்தி இந்து கடவுள் சிலையை வாங்காமல் அவமதித்ததாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அவர் சிலையைக் கையில் வாங்கியுள்ளார். அந்த வீடியோ எடிட் செய்து தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க