YouTurn

ராகுல்காந்தி கையில் வைத்திருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம் என பாஜகவினர் பரப்பும் பொய்!

ராகுல்காந்தி கையில் வைத்திருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம் என பாஜகவினர் பரப்பும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் நகலில் நீல அட்டை உள்ளது. அசல் சீன அரசியலமைப்பு, சிவப்பு அட்டையைக் கொண்டுள்ளது. ராகுல் சீன அரசியலமைப்பை கொண்டு செல்கிறாரா? நாம் சரிபார்க்க வேண்டும் - ஹிமந்தா பிஸ்வா சர்மா



X Link | Archive Link

விரிவான விளக்கம்

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20), 49 தொகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது கையில் சிவப்பு நிறத்தில் வைத்திருப்பது, இந்திய அரசியமைப்பு புத்தகம் அல்ல, சீன அரசியலமைப்பு புத்தகம், இந்திய அரசியலமைப்பு புத்தகம் நீல நிறத்தில் தான் இருக்கும் என்று கூறி, ராகுல்காந்தி கையில் சிவப்பு நிற புத்தகம் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் பரவி வரும் புகைப்படத்தில், இந்திய அரசியலமைப்பு புத்தகத்தையும், சீன அரசியலமைப்பு புத்தகத்தையும் குறிப்பிட்டு, ராகுல் காந்தியின் கையில் இருக்கும் சிவப்பு நிற புத்தகத்துடன் இவற்றை ஒப்பீடு செய்து குறிப்பிட்டிருந்ததையும் காண முடிகிறது.



இதனை அஸ்ஸாம் மாநில முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட, பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ராகுல்காந்தி சிவப்பு நிறத்தில் கையில் வைத்திருக்கும் புத்தகம், இந்திய அரசியலமைப்பு புத்தகம் தான் என்பதை அறிய முடிந்தது.

அமேசான் (Amazon) இணையதளத்தில் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போலவே, சிவப்பு நிறத்தில் இந்திய அரசியலமைப்பு புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். அதன் விளக்கத்தில், "இந்திய அரசியலமைப்பு (கோட் பாக்கெட் பதிப்பு) - 2023 பதிப்பு - EBC ஃப்ளெக்ஸிபவுண்ட்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக "கோட் பாக்கெட் பதிப்பு (Coat Pocket Edition)" என்பது எளிதாக எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் சிறிய அளவில் வடிவமைக்கப்படும் ஒரு புத்தகபதிப்பாகும்.



இதன்மூலம், இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் "கோட் பாக்கெட் பதிப்பையே (Coat Pocket Edition)" ராகுல்காந்தி தனது பிரச்சாரத்தின் போது கையில் வைத்துள்ளார் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. 



மேலும் கடந்த 2017 இல், இதே சிவப்பு நிற இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை, பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் போது, பரிசாக கொடுத்துள்ளார் என்பதை, The Statesman வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.



மேலும் படிக்க: மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையால் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மோடி சொன்ன பொய்!

மேலும் படிக்க: காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதில்லை எனப் பரவும் பொய்!

முடிவு:

நம் தேடலில், ராகுல்காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது கையில் சிவப்பு நிறத்தில் வைத்திருப்பது, இந்திய அரசியமைப்பு புத்தகம் அல்ல, சீன அரசியலமைப்பு புத்தகம் எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க