YouTurn

காங்கிரஸ் கட்சியுடனான அதிருப்தியில் பிரதமர் மோடியை சந்தித்தாரா ஹேமந்த் சோரன்?

காங்கிரஸ் கட்சியுடனான அதிருப்தியில் பிரதமர் மோடியை சந்தித்தாரா ஹேமந்த் சோரன்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2024ம் ஆண்டு ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது.

பரவிய செய்தி

ஜார்கண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரனும், அவரது மனைவியும் பிரதமர் மோடியுடன் சந்திப்பு! முன்னதாக சிபுசோரன் மறைவுக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆறுதல் கூறியது நினைவிருக்கலாம்! ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சி வர வாய்ப்பா?



Facebook Link | Archive Link

விரிவான விளக்கம்

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், பிரதமர் நரேந்திர மோடியை தற்போது சந்தித்துள்ளார் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் அப்பதிவுகளில், காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டதால் தான் பிரதமர் மோடியை தன் மனைவியுடன் ஹேமந்த் சோரன் சந்தித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Post Link: 


உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


கடந்த 2024 நவம்பரில் “ANI“ ஊடகப் பக்கத்தில் “ஜார்க்கண்ட் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவியும் ஜேஎம்எம் தலைவருமான கல்பனா சோரன் ஆகியோர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 



இதே போன்று, “Business Standard“ ஊடகப் பக்கத்திலும் கடந்த 2024 நவம்பர் 26 அன்று பரவி வரும் புகைப்படம் “ என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம், கடந்த 2024ம் ஆண்டு ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், “ஜார்கண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரனும், அவரது மனைவியும் பிரதமர் மோடியுடன் சந்திப்பு” எனப் பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க