YouTurn

அமித்ஷாவால் துணை ஜனாதிபதி பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரவைக்கட்டாரா?

அமித்ஷாவால் துணை ஜனாதிபதி பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரவைக்கட்டாரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2019-ல் முன்னாள் அதிமுக பொதுச் செயலார் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை மதுரையில் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பரவிய செய்தி

அமித் ஷா உட்கார்ந்து இருக்கும் நாற்காலியை பாருங்கள். நமது மேன்மை பொருந்திய துணை ஜனாதிபதி அமர்ந்து இருக்கும் நாற்காலியை மற்றும் அந்த பவ்யமான விதத்தை பாருங்கள். பிளாஸ்டிக் நாற்காலி, சோபா போன்ற அரசியல் ஆட்டம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பு அல்ல.



Post Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்ததாகவும், அமித்ஷாவின் முன்பு சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதையுடன் பவ்யமாக அமர்ந்திருப்பதாகவும் கூறி புகைப்படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



“The News Minute” ஊடகப் பக்கத்தில் கடந்த 2019 பிப்ரவரி 23 அன்று பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு “தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணிதான்: ஓபிஎஸ்க்கு அமித் ஷா விளக்கம்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 



அதில், “தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்ததை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, இனிமேல் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து பிரச்சார நிகழ்ச்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்வுகளாக விளம்பரப்படுத்தப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதன் மூலம் கடந்த 2019-ல் முன்னாள் அதிமுக பொதுச் செயலார் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை மதுரையில் சந்தித்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது என்பது உறுதியாகிறது. 


மேலும் அப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக ஆகியிருக்கவில்லை. 2025ம் ஆண்டு செப்டம்பரில் தான் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


முடிவு: 


நம் தேடலில், இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்த அமித்ஷா எனப் பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க