யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பலநூறு பேர் அமர்ந்து உணவு அருந்தும் 15 வினாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘சாப்பாட்டில் குழம்புக்குப் பதிலாகச் சாணி ஊற்றிச் சாப்பிடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சங்கிகள் இதனை முயற்சி செய்து வீடியோ பதிவிடுங்கள்’ எனப் பரப்பப்படுகிறது. இந்த சம்பவம் வட இந்தியாவில் நிகழ்ந்தது போலப் குறிப்பிடப்படுகிறது.

Facebook link
உண்மை என்ன?
பரவக் கூடிய தகவலில் இருப்பது போல் யாரும் சாப்பாட்டில் சாணியை ஊற்றிச் சாப்பிடப் போவது கிடையாது. சிலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைவதற்காக அப்படிச் செய்யலாமே தவிர நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை.
எனவே பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இந்த வீடியோவை 2023, ஏப்ரல் மாதம் ‘shorts 4 nation’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பங்களாதேஷில் உள்ள கிராமத்திற்கு இலவச உணவு வழங்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வீடியோ ‘Reddit’ தளத்திலும் 10 மாதங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் பங்களாதேஷ் என்றுதான் உள்ளது. ஆனால், எங்கு எப்போது எடுக்கப்பட்டது என எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது கிடையாது என அறிய முடிகிறது. மேலும் அந்த குழம்பில் கறி போன்று இருப்பதையும் காண முடிகிறது. இந்த குழம்பு வீடியோவைத்தான் மாட்டு சாணி எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : வடஇந்தியாவில் வெயிலுக்கு மாட்டுச்சாணம் ஜூஸ் குடிப்பதாகப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?
இதே போன்று வட இந்தியர்கள் வெயிலுக்கு மாட்டுச்சாணி ஜூஸ் குடிப்பதாகப் பரவிய வீடியோ பற்றிய உண்மையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், வட இந்தியர்கள் சாப்பாட்டில் குழம்புக்குப் பதிலாகச் சாணியை ஊற்றிச் சாப்பிடுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது குழம்புதான். மேலும் இந்த வீடியோ பங்களாதேஷில் எடுக்கப்பட்டது எனப் பல மாதங்களுக்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
சோத்துல குழம்புக்கு பதில் "சாணி "
தமிழ்நாட்டு சங்கிகள் ட்ரைபண்ணி வீடியோ போடுங்க ப்ரண்ட்ஸ்...#சங்கி pic.twitter.com/NfwpQNTTJI
— JCB.க.மோகன் (@MohanKArulz) January 30, 2024