YouTurn

ஒரு தம்பதியினர் நபர் ஒருவரை சரிமாரியாக வெட்டும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் பொய்!

ஒரு தம்பதியினர் நபர் ஒருவரை சரிமாரியாக வெட்டும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையது. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாகப் பரப்பி வருகிறனர்.

பரவிய செய்தி

என்னதான்டா நடக்குது தமிழ்நாட்டுல திமுகவுக்கு ஓட்டு போட்டா நாடு சுடுகாடு 

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் பொதுவெளியில் வைத்து ஒரு தம்பதியினர், நபர் ஒருவரை சரிமாரியாக வெட்டும் காட்சி என்று வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Pune First என்ற ஊடகப்பக்கத்தில் மார்ச் 06, 2026 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது. அதில் புனே இளைஞரை நாக்பூருக்கு இழுத்துச் சென்று, பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொன்ற தம்பதியினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதை வைத்துக் கொண்டு keywords மூலம் இந்த செய்தி குறித்து தேடினோம். அப்போது The Free Press Journal ஊடகப்பக்கத்தில் “Couple Lures Pune Man To Nagpur, Stabs Him To Death In Broad Daylight; Shocking Video Goes Viral On Social Media” என்று குறிப்பிட்டு மார்ச் 06, 2026 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. 

image.png


அதில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த சாகர் வான்கடே (35) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவர். இந்தச் சம்பவத்தில் ராஜேஷ் கஜ்பியே (37) மற்றும் அவரது 34 வயது மனைவி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையது. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாகப் பரப்பி வருகிறனர்.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க