YouTurn

பீகார் தேர்தலில் தோற்றதால் கதறி அழுத காங்கிரஸ் கட்சியினர் என்று பரப்பப்படும் வீடியோ? உண்மை என்ன?

பீகார் தேர்தலில் தோற்றதால் கதறி அழுத காங்கிரஸ் கட்சியினர் என்று பரப்பப்படும் வீடியோ? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் பத்திரிகையாளர் சந்திப்பில் அழுதபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

பீகாரில் மூத்த.. வயதான காங்கிரஸ் பொறுப்பாளரின்  கதறல்


image.png


X Link / Archive Link


image.png


Insta Link / Archive Link


image.png


Thread Link / Archive Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில், பாஜக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றது. 


இந்நிலையில், வயதான மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தேம்பி அழும் வீடியோ ஒன்றை  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ’பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமாக தோல்வியடைந்ததால் அதன் மாநில பொறுப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பிலே கதறி அழுவதாக’ பரப்பப்படுகிறது. 





உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’India Today’  ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.


 


அந்த செய்தியில், ‘அயோத்தியில் 22 வயது தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறி பத்திரிகையாளர் சந்திப்பிலே  சமாஜ்வாடி கட்சியின் எம்பி அவதேஷ் பிரசாத் அழுததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடியதில், ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. பிப்ரவரி 4, 2025 அன்று வெளியான இந்த செய்தியிலும் மேற்குறிப்பிட்ட அதே தகவல்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோ 8 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதும், பத்திரிகையாளர்  சந்திப்பில் அழுவது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் தெரியவருகிறது.


முடிவு:


8 மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அழுத பழைய வீடியோவை, பீகார் தேர்தலுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அழுததாக தவறான தகவலை பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க