YouTurn

மகாராஷ்டிராவின் தூலே தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகப் பரவும் தவறான செய்தி!

மகாராஷ்டிராவின் தூலே தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மகாராஷ்டிரா தூலே மாலோகன் தொகுதியில் பாஜக 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்த நிலையில் மறு எண்ணிக்கையில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 04 அன்று வெளியிடப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று, தனது பெரும்பான்மையை குடியரசு தலைவர் முன்னிலையில் நிரூபித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தூலே (Dhule) மக்களவைத் தொகுதியில் பாஜக 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மறுவாக்கு எண்ணிக்கையின் போது 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் மகாராஷ்டிராவின் தூலே தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளரான பச்சாவ் ஷோபா தினேஷ் (BACHHAV SHOBHA DINESH) 5,83,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் ஒருவர் 5,80,035 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இருவருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 3831 வாக்குகளே. ஆனால் பரவி வரும் செய்திகளில் காங்கிரஸ் வேட்பாளர் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல்.



மேலும் தூலே தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதா என்பது குறித்து ஆய்வு செய்ததில், தூலே தொகுதியின் வெற்றி நிலவரங்கள் குறித்து நியூஸ்18, இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் எதிலும் தூலே தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறித்து செய்திகள் வெளியிடப்படவில்லை.



இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) ஏற்பட்ட கோளாறு காரணமாக தூலே மக்களவைத் தொகுதிக்கான முடிவுகள் அறிவிப்பதில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.

ஆனால் தூலே மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை.

மேலும் படிக்க: பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 100 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளதாகப் பரவும் தவறான தகவல்!

மேலும் படிக்க: மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால் சந்திரபாபுவிற்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் எனப் பரவும் தவறான தகவல்!

முடிவு:

நம் தேடலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தூலே மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகவும், காங்கிரஸ் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. காங்கிரஸ் அங்கு 3831 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க