
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அன்பு பொழிந்த தருணம்😂😂😂 @annamalai_k @BJP4TamilNadu @ChengaiNorthIT @BJPTNSMWING @MSBalajiMSB @RaArjunamurthy @tnbjpsm @vivinbhaskaran @VenkatesanBjp @nsathiskumar1 @aghathiyar @EnMannEnMakkal @_KARAYAAN_ pic.twitter.com/AyBi05NrYn
— prasanna cp (@cp_prasanna) October 16, 2023
Archive Link:
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் #மகிழ்ச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய தருணம்.😂🤣😂 pic.twitter.com/ESf8GIaqzq
— சிவா (எ) செல்வக்குமார் 🌱🌱 அஇஅதிமுக🌱🌱 (@admksiva582021) October 17, 2023
Archive Link:
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோ மத்திய பிரதேசத்தை சேர்ந்தது அல்ல என்பதையும், உத்திரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிந்தது.

இந்த வீடியோவை, Hindustan Times கடந்த 2019 மார்ச் மாதம், "பாருங்கள்: உபியில் பாஜக எம்எல்ஏவும் எம்பியும் ஒருவரையொருவர் செருப்பால் தாக்கிக் கொண்டனர், கூட்டம் நடக்கும் போதே அறைந்து கொண்டனர்" என்ற தலைப்பில் யூடியூப் தளத்தில் பரவி வரும் வீடியோவை வெளியிட்டிருந்தது.
மேலும் இந்த வீடியோவின் விளக்கத்திலும், உத்திரபிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது, சந்த் கபீர் நகரின் பாஜக எம்பி ஷரத் திரிபாதியும், மேதாவால் தொகுதி எம்எல்ஏவான ராகேஷ் சிங் பாகேலும் சண்டையில் ஈடுபட்டனர். திரிபாதி தனது செருப்பால் பாகேலை அடிப்பதைக் காணக்கூடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பெயர் வைப்பது தொடர்பான வாக்குவாதத்தின் போது இந்த சண்டை ஆரம்பமானது " என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் 2019-இல் 'நியூஸ் 18' வெளியிட்டுள்ள கட்டுரையிலும், "மாவட்டப் பொறுப்பு அமைச்சரான அசுதோஷ் தாண்டன் முன்னிலையில் நடந்த மாவட்டக் குழுக் கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், "பாஜக எம்பி ஷரத் திரிபாதி, உள்ளூர் சாலைக்கான அடிக்கல்லில் தனது பெயர் இல்லாததால் எம்எல்ஏ ராகேஷ் சிங்கிடம் கோபமடைந்தார்" என்றுள்ளது.
முடிவு:
நம் தேடலில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக் கொள்ளும் காட்சி என்று பரவி வரும் வீடியோ, உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட பாஜக கூட்டத்தின் போது பாஜக எம்பிக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.