YouTurn

பிளாஸ்டிக் முட்டைகள் தயாரிப்பதாகத் தவறாகப் பரவும் சீன பொம்மைகள் தயாரிப்பு வீடியோ !

பிளாஸ்டிக் முட்டைகள் தயாரிப்பதாகத் தவறாகப் பரவும் சீன பொம்மைகள் தயாரிப்பு வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

முட்டை செய்யும் கோழிகள் மக்களின் கவனத்திற்கு..



Instagram Link:

விரிவான விளக்கம்

இந்தியாவில் பிளாஸ்டிக் முட்டைகள் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவில், பாத்திரம் ஒன்றில் இருக்கும் வெள்ளை நிற பசை போன்ற திரவத்தை ஒருவர் கைகளால் எடுத்து, பிளாஸ்டிக் முட்டை கூடுகளுக்குள் வரிசையாக வைப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2018-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதைக் காண முடிந்தது.



மேலும் ஆய்வு செய்ததில், சீனாவில் sohu ஊடகப் பக்கத்தில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து கடந்த 2017-ல் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த முட்டைகள் சீனாவில் குழந்தைகள் விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட பொம்மைகள் என்றும், இவை அங்கே உள்ள இணைய வணிகப் பக்கங்களில் (Ecommerce Sites) விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்டுள்ள அதே மஞ்சள் நிற லேபிள்கள், விற்பனைக்கான வைக்கப்பட்டுள்ள இந்த மூன்று பொம்மை முட்டைகளின் நடுவே ஒட்டப்பட்டுள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது.



குழந்தைகளுக்கான இந்த பொம்மை முட்டைகள் குறித்து சீனாவின் பல்வேறு இணைய வணிகப் பக்கங்களிலும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் "Korean God of Cookery Poached Egg Sharpee Glue" என்று சீன மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இவை போலியான பொம்மை முட்டைகள் என்பது உறுதியாகிறது.



இவ்வாறு பரவிய வீடியோ குறித்து, கடந்த 2018-ல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் "பிளாஸ்டிக் முட்டைகள் அல்லது செயற்கை முட்டைகள் என்பது ஒரு கட்டுக்கதையாக மட்டுமே உள்ளது. இயற்கையான முட்டையை ஒத்திருக்கும் பிளாஸ்டிக் அல்லது செயற்கை முட்டைகளை உற்பத்தி செய்ய எந்த தொழில்நுட்பமும் இங்கு இல்லை" என்று அதில் விளக்கமளித்திருந்தது. 



மேலும் படிக்க: ஆசிர்வாத் கோதுமை மாவில் பிளாஸ்டிக் கலக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி !

மேலும் படிக்க: லூபோ நிறுவனம் குழந்தைகள் சாப்பிடும் கேக்கில் மாத்திரை வைத்து விற்பனை செய்வதாகப் பரவும் மத வதந்தி!

முடிவு:

நம் தேடலில், இந்தியாவில் பிளாஸ்டிக் முட்டைகள் தயாரிப்பு என்று பரவி வரும் வீடியோ 2017-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இவை குழந்தைகளுக்காக சீனாவில் உள்ள பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் செய்யப்பட்ட பசை போன்ற பொம்மை முட்டைகள் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க