யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கேரள நிலச்சரிவின் பொது எடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மையல்ல.
பரவிய செய்தி
நில சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அங்கே இருந்த மரங்களை அழித்து தோட்டக்கலை பயிரிட்டதுதான் என தெரிய வந்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இப்படித்தான் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது.

விரிவான விளக்கம்
கேரளம் மாநிலத்தில் உள்ள வயநாட்டில் பெய்த அதிக கானமழைக் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் அதிக மலைக்கிராமங்கள் உருக்குலைந்தன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கேளரம் மாநிலத்தின் நிலச்சரிவிற்கு மரங்களை அழித்து தோட்டப் பயிரை சாகுபடி செய்ததுதான் காரணம் என்றுக் கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
நில சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அங்கே இருந்த மரங்களை அழித்து தோட்டக்கலை பயிரிட்டதுதான் என தெரிய வந்துள்ளது.
— Journalist George Kurian (@amMkn0) August 1, 2024
ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இப்படித்தான் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. pic.twitter.com/XlvpM3hVsd
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறியமுடிந்தது.
வீடியொவில் உள்ள காட்சிகளுடன் ’Manorama online' என்ற இணையதளப்பக்கத்தில் ஜுலை 24, 2024 அன்று செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அதில், சீனாவின் Hubei என்ற பகுதியில் கடந்த ஜூலை 17ம் தேதி நிச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு தேடியதில், ’Disaster News’ என்ற எக்ஸ் பக்கத்தில் ஜூலை 17ம் தேதி Hubei பகுதியில் உள்ள Zigui County என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு என்றுள்ளது. இதே தகவல் 'Son Of Earth’ என்ற யூடியூப் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டு இருப்பதை காண முடிகிறது.
A huge landslide in Zigui County of Hubei Province, China 🇨🇳 (17.07.2024)
— Disaster News (@Top_Disaster) July 17, 2024
TELEGRAM JOIN 👉 https://t.co/9cTkji5aZq pic.twitter.com/hwWt8tWQ4e
மேலும், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ’The Indian Express’ இணையதளப்பகக்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ACARR-ன் (Advanced Centre for Atmospheric Radar Research) இயக்குனர் அபிலாஷ் தோட்டப்பயிரை நடவு செய்ய மரங்களை வெட்டுவது கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறியுள்ளார்.

இதிலிருந்து, பரவிவரும் வீடியோ வயநாடு நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், இது சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், கேரள நிலச்சரிவின் பொது எடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மையல்ல. இந்த சம்பவம் சீனாவின் ஹூபே பகுதியில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.