
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link:
விரிவான விளக்கம்
மேலும்ம் பரவி வரும் வீடியோவில் இளைஞர் ஒருவர் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு, கூட்டத்திற்கு நடுவே தூக்கில் தொங்கவிடப்படுவதையும் தெளிவாகக் காண முடிகிறது. மேலும் இந்த வீடியோ முஸ்லீம்களுக்கு எதிராக மத ரீதியில் யூடியூப்களில் பரப்பப்படுவதையும் காண முடிகிறது.
*நாசமா போன இந்தியா...* ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் உயர்ந்த ஜாதியினருக்கு இழிவை ஏற்படுத்தி விட்டதாக கூறி அந்த இளைஞரை பொது வெளியில் தூக்கில் கொல்லப் பட்ட நிகழ்வு pic.twitter.com/Nm0fF1ewIA
— Hyder ❤️ (@hyderali857685) May 2, 2024
*நாசமா போன இந்தியா...* ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் உயர்ந்த ஜாதியினருக்கு இழிவை ஏற்படுத்தி விட்டதாக கூறி அந்த இளைஞரை பொது வெளியில் தூக்கில் கொல்லப் பட்ட நிகழ்வு pic.twitter.com/oHl2s0bPaO
— MK (@MaheenSylvan) May 1, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து ராஜஸ்தான் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், "பல்வேறு சமூக ஊடகதளங்களில் சில சமூக விரோதிகள் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டு, ராஜஸ்தானில் நடந்த சம்பவம் எனக் கூறி வருகின்றனர். இந்த காணொளி முற்றிலும் போலியானது. அப்படி ஒரு சம்பவம் இங்கு நடக்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
विभिन्न सोशल मीडिया हैंडल्स पर कुछ असामाजिक तत्व एक #FakeVideo पोस्ट कर घटना #राजस्थान की होने का दावा कर रहे हैं।
यह वीडियो पूर्णतया #Fake है, ऐसी कोई घटना यहां हुई ही नहीं है।
मामले की जांच की जा रही है, इस प्रकार के वीडियो पोस्ट करने वालों के खिलाफ होगी सख्त कार्रवाई। pic.twitter.com/5WPiaRaoxX
— Rajasthan Police (@PoliceRajasthan) April 28, 2024
இதே போன்று இந்த வீடியோ மேற்குவங்கத்தில் நடந்ததாகவும் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இதற்கு பதிலளித்துள்ள கொல்கத்தா டிசிபி (சைபர் கிரைம்) காவல்துறையினர், இது போலியான வீடியோ என்று குறிப்பிட்டு பதிலளித்துள்ளனர்.
Some people are circulating a video on Social Media claiming it to be Kolkata, WB. However, no such incident happened,& the claim is entirely fake. Please ignore this message and report such profiles to us.Strict legal action is being taken against those spreading such fake news. pic.twitter.com/R5EOw0AVEM
— DCP (Cyber Crime), Kolkata Police (@DCCyberKP) April 27, 2024
இது குறித்து, போலி வீடியோ என்று குறிப்பிட்டு கேரளா காவல்துறையினர், பதிலத்துள்ளதையும் காண முடிகிறது.
ஆனால் இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான விவரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. உரிய தகவல்கள் கிடைத்தவுடன், எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான விவரங்களும் கட்டுரையில் ஆதாரங்களுடன் இணைக்கப்படும்.
மேலும் படிக்க: கோயில் மண்டபம் மீது லாரி மோதிய விபத்தை மத ரீதியில் திசை திருப்ப முயற்சிக்கும் பாஜக நிர்வாகி!
மேலும் படிக்க: கேரள அரசுப் பள்ளி பாடப் புத்தகத்தில் மத ரீதியான பாகுபாட்டுடன் பாடம் இருப்பதாகப் பொய் பரப்பும் வலதுசாரிகள்!
முடிவு:
நம் தேடலில், ராஜஸ்தானில் பட்டியலின இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்ததால் கொலை செய்யப்பட்டதாகப் பரவும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது.