YouTurn

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பேருந்து நிலையம் எனப் பரப்பப்படும் கனடா பேருந்து முனையத்தின் வீடியோ !

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பேருந்து நிலையம் எனப் பரப்பப்படும்  கனடா பேருந்து முனையத்தின் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மத்திய பிரதேஷ் இந்தூர் பஸ் நிலையம்..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

த்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தூர் பஸ் நிலையத்தைப் பாருங்கள், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி 45 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், பயணிகள் உட்காரும் இடம், பயணச்சீட்டு வாங்கும் இடம், பேருந்து ஏறும் இடம் என அனைத்து வசதிகளும் ஒரு விமான நிலையத்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவில் இருப்பது இந்தூர் பேருந்து நிலையம் அல்ல. கனடா நாட்டில் அமைந்துள்ள பேருந்து முனையம் என்பதை அறிய முடிந்தது.

இந்தூர் சர்வதேச பேருந்து நிலையம் (Indore Sarwate Bus Stand) அதிநவீன வசதிகளுடன் கடந்த 2022ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அப்போதைய முதல்வரான சிவராஜ் செளகானால் திறந்து வைக்கப்பட்டது.  மறுசீரமைப்புக்கு பின்பு காத்திருப்பு பகுதி, உணவு உண்ணும் அறை (Food Court) மற்றும் Wifi வசதி போன்ற பல வசதிகள் இந்தூர் பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. ஆனால் பரவி வரும் வீடியோக்கும், இந்தூர் பேருந்து நிலையத்திற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.



பரவி வரும் வீடியோ, கனடா நாட்டில் அமைந்துள்ள ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தின் அரசு நிறுவனமான Metrolinx இன் பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2020-லேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், Union Station பேருந்து முனையம் திறப்பதற்கு தயாராக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



யூனியன் ஸ்டேஷன் பேருந்து முனையம் கனடாவின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது தொடர்பாக Metrolinx-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த பேருந்து முனையம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது (Project Overview), அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன என்பது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.



மேலும் கடந்த 2020 டிசம்பர் 04 அன்று கனடா போக்குவரத்து துறையின் இணை அமைச்சராக இருந்த Kinga Surma தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நாளை பயணிகளுக்காக புதிய பேருந்து முனையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். பரவி வரும் வீடியோவின் காட்சிகள், இந்த வீடியோவுடன் காட்சிகளுடன் ஒன்றிப் போவதை காண முடிகிறது. 



முடிவு :

நம் தேடலில், மபியின் இந்தூர் பஸ் நிலையத்தைப் பாருங்கள் என்றுக் கூறி பரவி வரும் வீடியோ, கனடா நாட்டின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் 2020ல் திறக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தின் வீடியோ என்பதை உறுதி செய்ய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க