YouTurn

எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும் என நெல்லை முபாரக் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும் என நெல்லை முபாரக் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எடப்பாடியார் மட்டும் இல்லையென்றால் சிஏஏ என்கிற கொடுஞ்சட்டம் அமலுக்கு வந்திருக்கும் - நெல்லை முபாரக்

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

மதுரையில் கடந்த ஜனவரி 07 அன்று SDPI கட்சி சார்பில், 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற பெயரில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், "எடப்பாடியார் மட்டும் இல்லையென்றால் சிஏஏ என்கிற கொடுஞ்சட்டம் அமலுக்கு வந்திருக்கும்" என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூறியதாகக் கூறி கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து அறிய, கடந்த ஜனவரி 07 அன்று நடைபெற்ற மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசிய வீடியோவை ஆய்வு செய்து பார்த்தோம். மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய அவர், "பாஜகவை விட்டு அதிமுக வெளிவந்தது, எஸ்டிபிஐக்கு மட்டும் அல்ல, நாட்டில் ஜனநாயகத்தை விருப்புகிற அனைவருமே விரும்பிய நிகழ்வு." என்று பேசியிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் மாநாட்டில் எந்த இடத்திலும் CAA சட்டம் குறித்து அவர் பேசவில்லை.



மேலும் SDPI கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்பக்கத்தில் இது குறித்து தேடியதில், கடந்த ஜனவரி 07 அன்று "நெல்லையார் - எடப்பாடியார், நெல்லையார் கை அசைத்தால் களம் மாறும்" என்ற தலைப்பில் கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.



எனவே கடந்த ஜனவரி 07 அன்று வெளியிடப்பட்ட இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.



மேலும் சிஏஏ என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக எதிர்த்ததால், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக வாக்களித்ததால் தான் அந்தச் சட்டம் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது.

முடிவு :

நம் தேடலில், எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும் என நெல்லை முபாரக் கூறியதாகப் பரவும் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க