யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தஞ்சாவூரில் தவெக கூட்டத்தில் ரசிகர்கள் ஏந்தி நின்ற விஜய் – சங்கீதா புகைப்படத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிடுங்கி சென்றதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. பரவி வரும் புகைப்படம் பிப்ரவரி 24, 2026 அன்று எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மார்ச் 04, 2026 அன்று தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் – சங்கீதா ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை ரசிகர் ஏந்தி நின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் ஏந்தி நின்ற அந்த புகைப்படத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிடுங்கி சென்றதாக புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகின்றது.
விஜயின் உத்தரவு படி விஜய் சங்கீதா புகைப்படம் உடனடியாக பறிமுதல் 😱
டேய் டேய் உண்மையாவே சங்கீதா மனசு கஷ்ட படும் டா 😩 pic.twitter.com/qX5rlqXmyQ
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Still Saravanan Velusamy என்ற எக்ஸ் பக்கத்தில், பிப்ரவரி 24, 2026 அன்று ஒரு பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் “தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட மக்கள் பரப்புரை நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களிடம் தளபதி புகைப்படத்தை கட்சி தொண்டர் ஒருவர் கொடுத்தார்” என்று குறிப்பிட்டு இரண்டு புகைப்படங்களை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அப்படங்களில் ஒன்று வைரலாகும் படத்துடன் ஒற்றுப்போவதை காண முடிந்தது. ஆனால் அதில் விஜய் – சங்கீதா ஜோடி இடம்பெற்றிருக்கவில்லை. விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமே இருந்தது.
தமிழக வெற்றிக் கழக
வேலூர் மாவட்ட மக்கள் பரப்புரை நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்களிடம் தளபதி புகைப்படத்தை கட்சி தொண்டர் ஒருவர் கொடுத்தார்... @TVKPartyHQ @TVKVijayHQ @TVK_WORLD @TVKHQITWingOffl #TVK #Tvkvijay #tvkvirtualwarrior pic.twitter.com/rdPGUL7AW0
இது குறித்து மேலும் தேடிப் பார்க்கையில், TVK விஜய்பாலாஜி என்ற எக்ஸ் பக்கத்தில், இதே புகைப்படம் பிப்ரவரி 24, 2026 அன்று பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
ஒரு தனி மனிதர். முன்னொரு காலத்தில் ஆயிரம் வெறுப்பு, அவமானங்களை தாங்கி பிடித்து என் தலைவனுக்கு நான் தான் டா பண்ணுவேன்
என்ற எண்ணத்துடன் அவர் உயிரை குடுத்து தளபதி தோள் நின்ற தளபதி @BussyAnand
நம் சீனியர் முன்னோடி ஆசான் அவர்கள் 🙏🏻🙏🏻
அவர் தாங்கி பிடித்திருப்பது Future CM @TVKVijayHQ pic.twitter.com/tWXdFmxdTO
இதனடிப்படையில் பார்க்கையில், விஜய் – சங்கீதா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் எடுத்துச் செல்வது போன்று பரவுவது எடிட் செய்யப்பட்டதாகும்.

முடிவு:
நம் தேடலில், தஞ்சாவூரில் தவெக கூட்டத்தில் ரசிகர்கள் ஏந்தி நின்ற விஜய் – சங்கீதா புகைப்படத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிடுங்கி சென்றதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. பரவி வரும் புகைப்படம் பிப்ரவரி 24, 2026 அன்று எடுக்கப்பட்டதாகும்.
