YouTurn

அயோத்தியில் புத்தர் சிலைகள் கிடைத்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

அயோத்தியில் புத்தர் சிலைகள் கிடைத்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல் புகைப்படம், பாகிஸ்தானில் உள்ள டாக்ஸிலாவில் உள்ள புத்த மடாலயத்தில் எடுக்கப்பட்டது. இரண்டாவது புகைப்படம் ஆப்கானிஸ்தானில் உள்ள மெஸ் அய்னாக்கில் எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

"அயோத்தியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள். ராமன் வரலாறு அல்ல புனையப்பட்ட கதை

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

அயோத்தியாவில் ராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் தோண்ட தோண்ட புத்தர் சிலைகள் கிடைத்து வருவதாக இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அப்போது பரவி வரும் புகைப்படங்களில் இருக்கும் முதல் புகைப்படம் ANCIENT PAGES என்ற இணையதளப் பக்கத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. அந்த பக்கத்தில் ”Takshashila: Renowned Learning Center That Attracted Buddhist Masters, Disciples And Students Of The World” என்ற தலைப்பில் ஜூலை 23, 2016ஆம் ஆண்டே இது குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. 


அதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டாக்ஸிலாவில் புத்த மடாலயம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3ஆம் நூற்றாண்டு வரையிலான பல உலக பாரம்பரிய தளங்களைக் கொண்ட நகரம் எனவும் அதில் குறிப்பிட்டுயிருந்தது. எனவே முதல் புகைப்படம், பாகிஸ்தானில் உள்ள டாக்ஸிலாவில் உள்ள புத்த மடாலயத்தில் எடுக்கப்பட்டது உறுதியானது. 

image.png


இதையடுத்து இரண்டாவது புகைப்படம் குறித்து தேடி பார்த்தோம். அப்போது HUFF POST என்ற இணையதளப்பக்கத்தில், இரண்டாவது புகைப்படத்தை காணமுடிந்தது. அந்த பக்கத்தில் ”The Fight to Save an Ancient Buddhist City in Afghanistan” என்ற தலைப்பில் டிசம்பர் 6, 2017 அன்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 


அதில் ஆப்கானிஸ்தானில் ஒரு பழங்கால புத்த நகரம் அமைந்துள்ளதாகவும், இதற்கு மெஸ் அய்னாக் என்று பெயரிடப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுயிருந்தது. மேலும் மெஸ் அய்னாக்கில் குறைந்தது 5,000 ஆண்டுகள் பழமையான நாகரிகம் உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. எனவே இரண்டாவது புகைப்படம் ஆப்கானிஸ்தானில் உள்ள மெஸ் அய்னாக்கில் எடுக்கப்பட்டது உறுதியானது. 

image.png


மேலும் படிக்க : அயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை !


இதே போல் ஏற்கனவே அயோத்தியில் புத்தர் சிலைகள் கிடைத்ததாக பரவி வந்த பல்வேறு செய்திகள் குறித்து நாம் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம். 


மேலும் படிக்க : ராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததாக வதந்தி !


முடிவு : 

நம் தேடலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியில் கிடைத்த புத்தர் சிலைகளை, அயோத்தில் கிடைத்ததாக கூறி பரவி வரும் புகைப்படங்கள் தவறானவை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க