YouTurn

எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பொய்யை பரப்பும் அஸ்வத்தாமன்!

எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பொய்யை பரப்பும் அஸ்வத்தாமன்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அதனை சமாளிக்க உற்பத்தியை அதிகப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

பரவிய செய்தி

”கேஸ் பற்றாக்குறையா? இல்லை.

வருமானத்தை மறைக்கும் ஹோட்டல்” - அஸ்வத்தாமன், பாஜக


Facebook Link

விரிவான விளக்கம்

இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்து ஈரானை தாக்கியதால், ஈரான் இஸ்ரேல் மீதும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), கத்தார், குவைத், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், வளைகுடா பகுதியில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்தை நிறுத்துவதாக ஈரான் அறிவித்தது. இதனால், எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை கிடைப்பதில் பல்வேறு நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஹோட்டல்களில் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. 


இது குறித்து பேசிய பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன், ’ஹோட்டல் முதலாளிகள் அனைத்து கேஸ் சிலிண்டர்களும் தீர்ந்து போயிவிட்டது, அதனால் உணவகங்களை மூடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. வருமான வரி துறையினர் 62 ஹோட்டல்களில் நடத்திய சோதனையில் இந்த ஹோட்டல்கள் தங்களது வருமானத்தை மறைத்து 408 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்த ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை மடைமாற்றவே இந்த ஹோட்டல்கள் சிலிண்டர் தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். சிலிண்டர்கள் தட்டுபாடு இருப்பதாக சொல்வது உண்மையல்ல’ என்று பேசினார். 



உண்மை என்ன?


எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு குறித்த செய்திகளை தேடினோம். ’ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம்’ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ‘போர் காரணமாக எரிபொருள் வழங்கலில் தடைகளும், சமையல் எரிவாயு (LPG) வழங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு, எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக’ தெரியவருகிறது. 



மேலும், பதுக்கலையும் கள்ளச் சந்தையில் சிலிண்டர்கள் விற்பதையும் தடுக்க 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் புக் செய்யமுடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.


image.png


போர் காரணமாக ஏற்பட்ட சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் உள்ள பல உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சில உணவகங்கள் சிலிண்டர்கள் இருப்பு குறைவாக இருப்பதால், மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று தெரிவித்துள்ளனர். மும்பையில் 20 சதவீத உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது, இந்த நிலை சரியாகவில்லை என்றால் இன்னும் இரண்டு நாட்களில் 50 சதவீத உணவகங்கள் மூடப்படும் என்று சொல்லப்படுகிறது. 


image.png


பல உணவகங்கள் சமைக்கப்படும் உணவு வகைகளை (Menu) குறைத்துக்கொண்டுள்ளனர். சில கடைகள் தங்களுக்கு மார்ச் 7ஆம் தேதியிலிருந்து சிலிண்டர்கள் கிடைக்காததால், டீ, காபி தவிர வேறு எதுவும் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளனர். 


வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு புக் செய்தாலும் பலருக்கு அதற்கான கட்டண ரசீது (Bill) கூட இன்னும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படவில்லை. புதிய சிலிண்டர்கள் புக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர். 


இவையெல்லாம், நாட்டில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலைவதற்காக தெளிவாக சான்றுகளாக உள்ளன.


முடிவு:


சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிலிண்டருக்கு தட்டுப்பாடே இல்லை என்று அப்பட்டமான பொய்யை பரப்பி வருகிறார் பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க