யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பிரேக்கிங் நியூஸ்! பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. எங்கள் திட்டம் தங்கள் வாழ்க்கையின் அடிப்படைகளை வாங்க முடியாத நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நபர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன! விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே 10000 ரூபிள் பெறத் தொடங்கியுள்ளனர். காலக்கெடுவை: 06/19/2024. இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும்.

விரிவான விளக்கம்
" 'பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024' விண்ணப்பங்களை ஏற்கத்தொடங்கியுள்ளது. எங்கள் திட்டம் தங்கள் வாழ்க்கையின் அடிப்படைகளை வாங்க முடியாத நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நபர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன! விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே 10000 ரூபிள் பெறத் தொடங்கியுள்ளனர்" என்றுகூறி செய்தி ஒன்றை பாஜகவினர் வாட்சாப் மற்றும் சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் இத்திட்டத்திற்கு பதிவு செய்ய கடைசி தேதி 06/19/2024 என்றும், விண்ணப்பிக்க இங்கே பதிவு செய்யவும் என்றுகூறி லிங்க் ஒன்றையும் சேர்த்து பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து அறிய, ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ PIB இணையதளத்தில் ஆய்வுசெய்து பார்த்ததில், "பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024" என்ற பெயரில் எந்தத் திட்டமும் நடைமுறையில் இல்லை என்பதையும், இதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.

'பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024' என்ற பெயரில் எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்பதோடு, நடைமுறையில் இருக்கும் வேறு எந்தத் திட்டத்திலும் "விண்ணப்பிக்க கடைசி தேதி 06/19/2024" என்று குறிப்பிட்டு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும், "பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை 10000 ரூபிள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூபிள் என்பது ரஷ்ய நாணயத்தை குறிக்கும் குறியீடு. இதன்மூலம் பாஜகவினரால் வாட்சாப் மற்றும் சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்படும் செய்திகள் போலியானவை என்பதை அறியமுடிகிறது.

இதே போன்று இந்தத்திட்டத்தில் விண்ணப்பிக்கக் கூறி அதில் குறிப்பிட்டுள்ள லிங்க் குறித்து ஆய்வு செய்ததில், இதுவும் போலியானது என்பதை அறியமுடிந்தது. எனவே மக்கள் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தளங்களுக்குள் செல்ல வேண்டாம். இதன்மூலம் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

முடிவு:
நம் தேடலில், 'பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024' திட்டத்தில் விண்ணப்பிக்கக் கூறி பாஜகவினர் வாட்சாப்பில் பரப்பும் செய்திகள் போலியானவை என்பதை அறியமுடிகிறது.