YouTurn

பாகிஸ்தான் கோசமிடுபவர்களுக்கு எதிரான ம.பி முதல்வரின் பேச்சு எனப் பரவும் பாஜக எம்எல்ஏவின் பழைய வீடியோ !

பாகிஸ்தான் கோசமிடுபவர்களுக்கு எதிரான ம.பி முதல்வரின் பேச்சு எனப் பரவும் பாஜக எம்எல்ஏவின் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

நீங்கள் முஸ்லிம்கள் உங்களுடைய வழிபாடுகளை உங்கள் முறைப்படி செய்வது எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் இது இந்துஸ்தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செய்யுங்கள். இங்கு வந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத், ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்னு சப்போர்ட் பண்ற வேலையெல்லாம் இருக்கக்கூடாது.

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த 2023 சட்டசபை தேர்தலில் 163 தொகுதிகள் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து, மோகன் யாதவ் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான பதவி பிரமாணம் கடந்த டிசம்பர் 13 அன்று ஆளுநர் மங்குபாய் படேல் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மோகன் யாதவ் பதவியேற்று இரண்டு தினங்களே ஆன நிலையில், இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆதரவு மோசமிடும் வேலையை எல்லாம் செய்யக்கூடாது எனப் பேசுவதாகக் கூறி 1:47 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவில் இருப்பவர் மத்திய பிரதேச முதலமைச்சரான மோகன் யாதவ் அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் இதன் முழு வீடியோ, ETV Bharat யூடியூப் பக்கத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 23 அன்று "'அவர்கள் சில நாட்கள் தாலிபானில் இருக்கட்டும்' என்று பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார் | ஈடிவி பாரத்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், உஜ்ஜையினியில் மொஹரம் பண்டிகையையொட்டி 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக, அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவின் எம்எல்ஏ ராமேஷ்வர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதைக் காண முடிந்தது.


ஆனால் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள மத்திய பிரதேசத்தின் முதலமைச்சரான மோகன் யாதவ் தான் இவர் என்று கூறி பலரும் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் பரவி வரும் வீடியோவில் பேசியிருப்பவர், பாஜக எம்எல்ஏவான 'ராமேஷ்வர் சர்மா' என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: ம.பியில் காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக் கொள்வதாகப் பரவும் பாஜகவினரின் பழைய வீடியோ !

இதற்கு முன்பும், மத்திய பிரதேசம் குறித்து பல தவறான செய்திகள் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !

முடிவு:

நம் தேடலில், இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத், ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்னு சப்போர்ட் பண்ற வேலையெல்லாம் இருக்கக்கூடாது என மத்திய பிரதேச முதல்வர் பேசியதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், 2021ல் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் இருப்பவர் பாஜக எம்எல்ஏவான ராமேஷ்வர் சர்மா என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க