YouTurn

மதுவை அதிரடியாக தடை செய்த உத்தர்காண்ட் மாநில அரசு என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

மதுவை அதிரடியாக தடை செய்த உத்தர்காண்ட் மாநில அரசு என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு மட்டுமே அம்மாநில அரசின் புதிய கலால் கொள்கை உறுதி செய்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

முதலில் uniform civil code. Now prohibition. தமிழ்நாடு தவிர எல்லோரும் வளர்ச்சியை நாடி முன்னேறுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாடு மட்டும்???
கடவுளே எங்களை விரைவில் காப்பாற்று.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

உத்தர்காண்ட் மாநில பாஜக அரசு தனது மாநிலத்தில் மதுவை அதிரடியாக தடை செய்தது என்று கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் இந்த செய்தி குறித்து கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது Financial Express ஊடகத்தில் "New Excise Policy 2025: Uttarakhand to shut liquor shops around religious places, license to be cancelled if price more than MRP" என்ற தலைப்பில் இது குறித்து மார்ச் 03, 2025 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் உத்தரகாண்ட் அரசு புதிய கலால் கொள்கை 2025 ஐ நிறைவேற்றியுள்ளது.  மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு மட்டுமே அம்மாநில அரசின் புதிய கலால் கொள்கை உறுதி செய்துள்ளது.  கூடுதலாக, அதிக மக்கள் உணர்வுகள் காரணமாக மதுபான விற்பனையில் அதிக கட்டுப்பாடு இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


அதே போல் "Liquor Shops Near Religious Places In Uttarakhand To Be Shut Under New Policy" என்ற தலைப்பில் ND TV ஊடகத்தில்  செய்தி வெளியாகியிருந்தது. அதில் உத்தரகாண்டில் 2023-24 நிதியாண்டில் ரூ.4,038.69 கோடி வருவாய் ஈட்டப்பட்ட நிலையில்,  புதிய கலால் கொள்கை மூலம் 2025-26 நிதியாண்டில் ரூ.5,060 கோடி வருவாய் இலக்கும் அங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


மேலும் இது குறித்து தேடிய போது, மாலை மலர் ஊடகத்தில் "உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த வீடுகளிலேயே தனியார் மது பார் நடத்த அனுமதி- அரசு அறிவிப்பு" என்ற தலைப்பில் மார்ச் 24, 2023 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. வீடுகளில் நடத்தப்படும் பார்களில் 60 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பானங்கள் வைத்து கொள்ளலாம். 9 லிட்டர் அளவுக்கு பீர் பாட்டில் வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

image.png


முடிவு:

எனவே, உத்தரகாண்ட் மாநிலத்தில் மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு மட்டுமே அரசின் புதிய கலால் கொள்கை உறுதி செய்துள்ளது. அதே போல் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்தவும் அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு தனது மாநிலத்தில் மதுவை தடை செய்துள்ளது என்று பாஜகவினர் தவறாக செய்தியை பரப்பி வருகின்றனர்.

சுருக்கமாக


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க