YouTurn

வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியாவில் எடுக்கப்பட்டது போல் பரப்பும் பாஜகவினர்!

வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியாவில் எடுக்கப்பட்டது போல் பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ எடுக்கப்பட்டது வங்கதேசத்தில், இந்தியாவில் அல்ல. டாக்கா பல்கலைக்கழகத்தில் வெளிநபர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மாணவர்கள் அந்த நபரை தாக்கி, பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டு வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பரவிய செய்தி

டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்து மாணவிகளை இஸ்லாமியர்களை காதலிக்க சொல்லி அறிவுரை வழங்கி லவ் ஜிகாத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

விசாரனையில் ஆசிரியர் பங்களாதேஷை சேர்ந்தவன் என கண்டுபிடிப்பு 

image.png

Archived Link

விரிவான விளக்கம்

டெல்லி பல்கலைக்கழகத்தில்  இஸ்லாமியர்களை இந்து மாணவிகள் காதலிக்க அறிவுரை வழங்கிய ஆசிரியரை மாணவிகள் தாக்கிய காட்சி என்று சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் வைரலான வீடியோவின் முக்கியக் காட்சிகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Bangla News 24 ஊடகத்தின் யூடியூப் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் ஏப்ரல் 26, 2026  வைரலான வீடியோவில் உள்ள அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலைக்கழகத்தில் வெளிநபர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மாணவர்கள் அந்த நபரை தாக்கி, பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.


இது குறித்து மேலும் தேடியப் போது, இதே வீடியோ ஏப்ரல் 26, 2026 அன்று வங்கதேசம் செய்தி நிறுவனமான Aajker Patrika, அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவிலும் இச்சம்பவம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகவே குறிப்பிட்டிருந்தது. 


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, "டெல்லி பல்கலைக்கழகத்தில்  இஸ்லாமியர்களை இந்து மாணவிகள் காதலிக்க அறிவுரை வழங்கிய ஆசிரியரை மாணவிகள் தாக்கிய காட்சி" எனப்பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோ எடுக்கப்பட்டது வங்கதேசத்தில், இந்தியாவில் அல்ல. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க