யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மே 12ஆம் தேதி அர்ஜுன் பர்மர் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட வீடியோவை இறந்த இராணுவ வீரர் ’முரளி நாயக்’-ன் வீடியோ என்று தவறாக பரப்புபுகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீரின் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சிலரும் வீர மரணமடைந்தனர். அந்த வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் படைகளின் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் எம். முரளி நாயக் வீரமரணமடைந்தார்.
இந்நிலையில் வீரமரணமடைந்த முரளி நாயக், உடற்பயிற்சி செய்யும் பழைய வீடியோ என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
Martyr Murali Naik 💔 🇮🇳 #IndiaPakistanWar #OperationSindoor#IndianArmy pic.twitter.com/NZr3TrH1ed
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது arjun_deshi_fitness என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

அங்கு, பரவி வரும் காணொளி மார்ச் 12ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. மேலும் அந்த காணொளியின் caption-ல் #Viral #Trading #Reels என்ற hastagகளை பயன்படுத்தி, MotoGP ரேசிங் குறித்தும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.
அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் காணொளி போல் பல உடற்பயிற்சி செய்யும் காணொளிகளும் இடம்பெற்று இருந்தது. மேலும் அதன் bioவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பயன்படுத்துபவரின் பெயர் Arjun Parmar என்றும், Health/beauty என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து bioவில் இருந்த யூடியூப் லிங்க் மூலம் தேடிப் பார்த்த போதும், Arjun_Deshi_fitness_7771 என்ற பெயரில் உடற்பயிற்சி செய்யும் பல்வேறு காணொளிகள் அதில் இடம்பெற்றிருந்ததைக் காணமுடிந்தது.

முடிவு :
நம் தேடலில், பரவி வரும் காணொளியில் இருப்பவர் இறந்த இராணுவ வீரர் முரளி நாயக் இல்லை என்பது உறுதியானது. இது இறந்த இராணுவ வீரர் ’முரளி நாயக்’-ன் காணொளி என்று தவறாகப் பரப்புகின்றனர்.
