YouTurn

குஜராத்தில் பாஜக தலைவர் வீட்டில் ₹18 கோடி கைப்பற்றப்பட்டதாகப் பரவும் வதந்திகள் !

குஜராத்தில் பாஜக தலைவர் வீட்டில் ₹18 கோடி கைப்பற்றப்பட்டதாகப் பரவும் வதந்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றிய பணம் மூன்று நாட்களாக என்னப் படுகிறது இந்த இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சனம் அடிப்பது கொள்ளை பேசுவது நீதி நேர்மை..



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

குஜராத் பாஜக தலைவர் சிக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் ₹18 கோடி கறுப்புப்பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி வீடு முழுவதும் அடுக்கப்பட்டுள்ள பணக்கட்டுகள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் எண்ணப்படுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் பரவப்படும் அப்பதிவுகளில் "மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றிய பணம் மூன்று நாட்களாக எண்ணப்படுகிறது. இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சணம், அடிப்பது கொள்ளை, பேசுவது நீதி நேர்மை." என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Archive Link:



Archive Link:

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த பணம் குஜராத் பாஜக தலைவரான சிக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றப்பட்டது அல்ல என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

இது குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், இது E-Nuggets என்ற மொபைல் விளையாட்டு செயலிக்கு தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம் என்பதை அறிய முடிந்தது.

மேலும் இது குறித்து CNN-News18 தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த 2022 செப்டம்பர் 11 அன்று "ED கொல்கத்தாவில் பெரும்சோதனை நடத்தி ₹18 கோடி பணத்தை மீட்டது | வைரல் வீடியோ" என்னும் தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இந்த வீடியோவுடன் ஒத்துப்போவதை அறிய முடிகிறது.



இதே போன்று Hindustan Times 2022 செப்டம்பர் 11 அன்று இது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மொபைல் விளையாட்டு செயலிக்கு தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக கொல்கத்தாவில் ஆறு இடங்களில் சோதனை நடத்திய அமலாக்க இயக்குனரகம் (ED) சுமார் ₹ 18 கோடி மதிப்பிலான பணத்தை மீட்டுள்ளது. எட்டு பணநோட்டுகள் எண்ணும் இயந்திரங்களைக் (Cash Counting Machine) கொண்டு வங்கி அதிகாரிகள் மூலம் எண்ணியதில் இரவு 7:30 மணி வரை கைப்பற்றப்பட்ட தொகை 18 கோடியாக இருந்தது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் இது குறித்து தேடியதில், The Economic Times 2022 செப்டம்பர் 10 அன்று இது குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் "கொல்கத்தாவைச் சேர்ந்த மொபைல் கேம் ஆபரேட்டர் மீது நடத்தப்பட்ட சோதனையில் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை ED மீட்டுள்ளது. அதன் விளம்பரதாரர் அமீர் கான் மற்றும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





மேலும் இது குறித்து அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த 2022 செப்டம்பர் 12 அன்று இது குறித்து பதிவிட்டுள்ளதை காண முடிந்தது. அதில் "ED ஆனது PMLA, 2002 சட்டத்தின் கீழ் (10.09.2022 அன்று) கொல்கத்தாவில் உள்ள 6 வளாகங்களில், மொபைல் கேமிங் செயலி ஒன்றுக்கு தொடர்புள்ள இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி 17.32 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.







மேலும் படிக்க: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சேகர் அகர்வால் வீட்டில் நடந்த சோதனையில் மீட்கப்பட்ட பணமா?


இதற்கு முன்பும் இதே வீடியோவை ஆம் ஆத்மி தலைவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்டது என ஆங்கிலத்தில் தவறாகப் பரப்பினர். இது குறித்தும் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.



முடிவு:


நம் தேடலில், குஜராத்தில் பாஜக தலைவர் வீட்டில் 18 கோடி கைப்பற்றப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இவை கொல்கத்தாவில் உள்ள E-Nuggets என்ற மொபைல் விளையாட்டு செயலிக்கு தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க