
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும் அந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னிடம் உள்ள துப்பாக்கியை ஒரு இளைஞரிடம் கொடுப்பது போன்றும், அதற்கு அந்த இளைஞர் தன்னுடையது அல்ல என்று வாங்க மறுப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ट्रैफिक पुलिस का सिपाही वीडियो में साफ साफ दिख रहा किस तरह युवक के हाथ में तमंचा रख रहा ,युवक कहता ये मेरा नहीं है आपके सिपाही गंदी गालियां देते और उसके गाल में रसीट कर तमाचा रख देते।
गाली देने का क्या मतलबpic.twitter.com/nvtN8bORR4
— Mahima Yadav (@SinghKinngSP) November 30, 2023
ट्रैफिक पुलिस का सिपाही वीडियो में साफ साफ दिख रहा किस तरह युवक के हाथ में तमंचा रख रहा ,युवक कहता ये मेरा नहीं है आपके सिपाही गंदी गालियां देते और उसके गाल में रसीट कर तमाचा रख देते। pic.twitter.com/tOhNPvcDE5
— Dinesh Kumar (@DineshKumarLive) November 30, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ ABP Ganga யூடியூப் பக்கத்தில் "கான்பூர் செய்தி: துப்பாக்கியுடன் பைக் ஓட்டி வந்தவரை போக்குவரத்து காவலர்கள் பிடித்தனர். ஏபிபி கங்கா லைவ்" என்ற தலைப்புடன் கடந்த நவம்பர் 30 அன்று வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
மேலும் தேடியதில், இந்த வீடியோவோடு தொடர்புடைய மற்றொரு வீடியோவும் கிடைத்தது. அதில் இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர் ஒருவர் சாலையில் கீழே விழுவது போன்றும், அவருடைய வாகனத்திற்கு அருகில் கீழே விழுந்து கிடக்கும் துப்பாக்கியை போக்குவரத்து காவலர் ஒருவர் ஓடி வந்து கைப்பற்றுவது போன்றும் உள்ள காட்சிகளைக் காண முடிந்தது. இதன் மூலம் அந்த துப்பாக்கி இருசக்கர வாகனத்தில் இருந்து தான் கீழே விழுந்துள்ளது என்பது தெளிவாகிறது.
कानपुर पुलिस के गुडवर्क पर बहुत सारे लोग सवाल उठा रहे हैं, लेकिन दूसरे वीडियो से साफ हो गया की युवक के गिरने पर उसकी कमर में खुंसा तमंचा सड़क पर गिर गया और ट्रैफिक पुलिस ने दबोच लिया...।
पकड़ा गया युवक शातिर अपराधी तौहीद है, उसने 2021 में बच्चे के अपहरण-हत्याकांड किया था...। pic.twitter.com/ORTERhaauw
— Dilip Singh (@dileepsinghlive) November 30, 2023
பரவி வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து கடந்த நவம்பர் 30 அன்று POLICE COMMISSIONERATE KANPUR NAGAR தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், "உத்தரபிரதேச காவல்துறையானது 29.11.2023 அன்று அஜீஸ் ரெஹ்மானின் மகன் ரூமி என்கிற தௌஹித் அலி, 135/524 முன்ஷி பூர்வா காவல் நிலையம் பாபுபூர்வா கான்பூர் நகர், வயது 21, சட்டவிரோத ஆயுதம் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததற்காக கைது செய்தது.
[video width="848" height="480" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2023/12/dileepsinghlive-1730173052766556537-Video-2.mp4"][/video]

தட்மில் சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்களால் குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து விழுந்த சட்டவிரோத ஆயுதம் கைப்பற்றப்பட்டது தெளிவாகிறது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலான வீடியோ குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவர் மீது எப்ஐஆர் எண். 78/2021 பிரிவு 302/201-ன் படி பாபுபூர்வா கான்பூர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: துப்பாக்கியில் தோட்டா நிரப்ப தெரியாமல் அண்ணாமலை முழித்ததாக தவறாகப் பரவும் உபி வீடியோ !
மேலும் படிக்க: உ.பியில் பசு மாட்டைத் தாக்கிய நபரை காவல் துறையினர் தாக்கியதாகப் பரப்பப்படும் பொய் !
முடிவு:
நம் தேடலில், உபியில் முஸ்லீம் இளைஞரிடம் வலுக்கட்டாயமாக துப்பாக்கியைக் கொடுத்து கைது செய்யும் காவல்துறையினர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், துப்பாக்கியைக் கொண்டு வந்ததே கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் தான் என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.